இவ் வானொலிச் சேவையானது READING இல் வாழும் இலங்கை முஸ்லிம்களின் அமைப்பான ASSOCIATION OF SRILANKAN MUSLIM IN READING UK (A-S-L-A-M) இன் ஒரு பகுதியாக நடாத்தப்பட்டு வருகின்றது.
இதன் நிருவாக பணிப்பாளராக ASLAM இன் தலைவர் சகோதரர் LUKMAN HAREES அவர்களும், ASLAM இன் பிரதானமான அங்கத்தவர்களாகவும் நிகழ்ச்சிகளை தமிழில் தொகுத்து வழங்கும் அறிவிப்பாளர்களாகவும் மன்னார் தாராபுரத்தை பிறப்பிடமாகக் கொண்ட சகோதரர் MOHAMED ISMATH BAWA MOHIDEEN அவர்களும் கண்டி மடவளையைச் சேர்ந்த சகோதரர்கள் MOHAMED ILHAM MOHAMED MUNAWWAR மற்றும் MOHAMED FAZLY ABDUL AZEEZ ஆகியோரும் செயற்படுகின்றனர்.
இந்த வானொலியே ஐரோப்பியாவில் ஒலிபரப்பாகும் முதல் முழு நேர இஸ்லாமிய வானொலி சேவையாகும் என்பது கருத்தில் கொள்ளப்படவேண்டிய விடயமாகும். மற்றும் இதன் தமிழ் சேவை ஆரம்பித்தவுடன் அநேகமான ஐரோப்பிய நாடுகளின் தமிழ் பேசும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் விருப்பத்துக்குரிய வானொலி சேவையாக மாற்றியதற்கு காரணமாயிருந்தது எமது சகோதரர்களின் முயற்சியே என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
தற்போது இச்சேவை வாரத்துக்கு இரண்டு மணித்தியாலங்கள் (செவ்வாய் இரவு 8 மணி முதல் இரவு 10 மணி இங்கிலாந்து நேரம்) மட்டுமே ஒலிபரப்பனாலும் இன்ஷா அல்லாஹ் வெகுவிரைவில் இச்சேவையின் ஒலிபரப்பாகும் நேரத்தை அதிகரிப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டு இருப்பதாக தெரிவித்து இருக்கின்றார்கள்.
இரண்டு மணித்தியலங்கள் கொண்ட இச்சேவை கிராத்துடன் ஆரம்பமாகி ஹதிஸ் விளக்கம், மக்களுக்கான நேரம், நடப்புகள் என்ற இந்த வார உலக நடப்புகளை பற்றி விசேட விருந்தினர்களோடு கலந்தலோசிக்கப்டும் நிகழ்ச்சி மற்றும் முஸ்லிம் சிறார்களின் திறமையை வெளிபடுத்த வாய்ப்பளிக்கபடும் நிகழ்ச்சி, விசேட அதிதியின் பயான் நிகழ்ச்சி மற்றும் செய்தி அறிக்கை போன்ற நிகழ்ச்சிகள் இத்தமிழ் சேவையில் ஒலி பரப்பப்படுகின்றன.
இச்சேவையை உள்ளூர் நேயர்கள் 95.6 FM அலைவரிசையில் வானொலி மூலமாகவும் இங்கிலாந்தின் ஏனைய பகுதிகளிலும் உலகெங்கிலும் www.1ummahfm.co.uk/listen-live <http://www.1ummahfm.co.uk/listen-live> என்ற இணையதளத்தினூடகவும் செவ்வாய்தோறும் இங்கிலாந்து நேரப்படி இரவு 8 மணி தொடக்கம் 10 மணி வரை கேட்டு மகிழலாம்.
ASSOCIATION OF SRILANKAN MUSLIM IN READING UK இங்கிலாந்தில் வெற்றிகரமாக இயங்கிவருகின்ற அதேவேளை இலங்கையிலும் முஸ்லிம் சமூகத்திற்கு பலவகையான உதவிகளைச் செய்துவருவது குருப்பிடத்தக்கது.தற்போது இந்த அமைப்பானது READING நகரில் ஒரு நிரந்தர இலங்கை இஸ்லாமியா நிலையத்தை அமைப்பதற்கு தேவையான எல்லா முயற்சிகளையும் செய்துவருகின்றமை ஒரு முக்கிய விடயமாகும்.FACE BOOK: ONEUMMAHFMTAMIL
E-MAIL : oneummahfmtamil@gmail.com
SKYPE : ONEUMMAHFMTAMIL
தொடர்புகளுக்கு
T.P :