நோன்பு சட்டங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நோன்பு சட்டங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ரமதான்-வெற்றியின் மாதம்!

புகழனைத்தும் அகில உலகங்கள் அனைத்தின் அதிபதியாகிய அல்லாவிற்கே உறித்தாகுக. அவனே தனது அருள்மறையில் விவரிக்கின்றான்..

உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்). (2:185)

ரமதான் எனும் இப்புனித மாதத்தில் அல்லாஹ்(சுபு) தனது படைப்பினங்களை சோதனைக்கு ஆட்படுத்தி தனது அருட்கொடையைப்பெற ஒரு வாய்ப்பினை வழங்குகின்றான். முஸ்லிம்களின் ஈமானும் இஸ்லாத்தின் மீதான ஈடுபாடும் ஒரே தலைமையின் கீழ் போர்க்களத்தில் எவ்வாறு வெளிப்பட்டது என்பதும் இம்மாதத்தின் ஒரு முக்கிய அம்சமாகும்.

நபிகளார்(ஸல்) அவர்களும் சஹாபா பெருமக்களும் கூட்டாக ஒன்பது ரமதான்களை கடந்து வந்தனர். அக்காலங்களில் பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன.

அல்லாஹ்(சுபு)ன் கட்டளைகளை உயர்வாகப்போற்றி அதனை மெய்ப்பிக்கப் பாடுபடுவதற்கான மும்மாதிரியாக அவை விளங்குகின்றன. அல்லாஹ்(சுபு)வின் பாதையில் தியாகம் செய்வதற்கும், அவனது கட்டளைகட்கு கீழ்படிந்து அவைகளை மெய்ப்பிக்கப் பாடுபடுவதற்கும் சிறந்த உதாரணங்களாக அச்சம்பவங்கள் திகழ்ந்தன.

மதீனாவிலிருந்த பொய்யர்கள் முஸ்லிம்களின் ஒற்றுமையை குலைப்பதற்கு எண்ணி அல்திரார் எனும் ஒரு மசூதியை கட்டினர். ரமதான் மாதத்தில் தபூக்கிலிருந்து திரும்பிய நபிகளார்(ஸல்) அதனை உடனடியாக இடித்துவிடுமாறு உத்தரவிட்டனர்.

ரமதான் 17ம்நாள் 2ம் ஹிஜிரி அல்லாஹ்(சுபு) பத்ர் போரின் போது முஸ்லிம்கட்குசிறந்த ஒரு வெற்றியை அளித்தான்.

'பத்ர்" போரில் நீங்கள் மிகவும் சக்தி குறைந்தவர்களாக இருந்த போது, அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான். ஆகவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.(நபியே!) முஃமின்களிடம் நீர் கூறினீர்: 'உங்கள் ரப்பு (வானிலிருந்து) இறக்கப்பட்டமூவாயிரம் வானவர்களைக் கொண்டு உங்களுக்கு உதவி செய்வது உங்களுக்குப்போதாதா?" என்று.(ஆல் இம்ரான் 3:123 124)

இஸ்லாமிய வரலாற்றில் இது முதல் போரும் முதல் வெற்றியுமாகும். 313 படைவீரர்கள்2 குதிரைகள் 70 ஒட்டகங்களுடன் நபிகளார் தலைமையில் மதீனாவினின்று சென்றஇஸ்லாமிய படையானது 1000 வீரர்கள் 100 குதிரைகள் 700 ஒட்டகங்களுடன் மக்காவினின்றும்அபு ஜஹல் தலைமையில் வந்த படையை வீழ்த்தியது. அப்போரின் போது இறைவன்நபிகளாருக்கு(ஸல்) வஹீ மூலம் அறிவிக்கின்றான்.

உங்களை இரட்சிக்குமாறு உங்கள் இறைவனின் உதவியை நாடியபோது: '(அணி அணியாக உங்களைப்) பின்பற்றி வரக்கூடிய ஓராயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக உங்களுக்கு உதவி புரிவேன்" என்று இறைவன் உங்களுக்கு பதிலளித்தான். (8:9)

இதனைக் கேட்ட நபிகளார்(ஸல்) மகிழ்சியுற்று 'ஓ அபூபக்கர்! அல்லாவின் வெற்றி நம்மை வெகுவிரைவில் வந்தடையும். அல்லாவின் மீதாக ஜிப்ரயீல் குதிரையில் வருவதை என்னால் காணமுடிகிறது" என்றனர். இதனைப்போன்றே யூத அரசுக்கெதிரான போரில் வெற்றி பெருவோம் என்பது மட்டுமன்றி இஸ்லாத்தின் ஆதிக்கம் உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் என்பதையும் பல ஹதீத்கள் விளக்குகின்றன. அதற்காக நாம் துஆ செய்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் முஸ்லிம்கள் அனைவரும் இணைந்து ஒரே உம்மத்தாக நின்று ஒரே இஸ்லாமிய அரசினை நிலைநாட்டி அதன்மூலம் அவ்வெற்றிகளுக்காக பாடுபடவேண்டும் என்பது இஸ்லாம் நம்மீது விதித்த கடமையாகும்.

பத்ர் போரின் வெற்றி முஸ்லிம்களின் இறைநம்பிக்கையை வலுப்படுத்தி மதினாவில் ஒரு வலுவான அரசினை நிலைநாட்டி அதனை அரசியல், ஆன்மீக, ராணுவ மையமாக ஆக்கியது.
ஆறாம் ஹிஜிரி ஆண்டில் வாதி அல் குரா எனுமிடத்தின் அரசியாய் திகழ்ந்தஃபாத்திமா பின் ராபியாவை எதிர்கொள்ள சயித் இப்ன் ஹரிதா அனுப்பப்பட்டார். அதற்குமுன்பு ஒருமுறை அவ்வரசி சயித் தலைமை தாங்கிச்சென்ற குழுமத்தை தாக்கி அவர்களின்பொருட்களை அபகரித்தார். ஃபாத்திமா பின் ராபியா அரேபியப் பகுதிகளில் மிகவும் காவல்மிகுந்த அரசியாகக் கருதப்பட்டார். மேலும் அவர் வெளிப்படையாக இஸ்லாத்தைஎதிர்ப்பவராகவும் அறியப்பட்டார். அவர் ரமதான் மாதத்தில் நடைபெற்ற முஸ்லிம்கட்குஎதிரான போரில் கொல்லப்பட்டார்.

எட்டாம் ஹிஜிரி ரமதானில் ஹ_தைபியா ஒப்பந்தம் மீறப்பட்டதனால் இஸ்லாமியப்படையானது பைசன்டைன் படையை எதிர்த்துப் போரிட்டது.
அரேபிய தீபகற்பத்தில் இறைமறுப்பை அடியோடு அழிக்க எண்ணிய நபிகளார்(ஸல்) ரமதான் மாதத்தில் மக்கா நகரை வெற்றி கொண்டனர். இது இஸ்லாமிய வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இதன் பிறகே இஸ்லாம் அரேபியாவில் வலுவாக வேறு}ண்றியது. அச்சமயம் மக்காவின் தொழுவுருவங்களை

அழித்தபிறகு, அரேபியாவின் மற்ற பகுதிகளில் சிறப்பானதாகக் கருதப்பட்ட அல்-லாத், மனாத், சுவா போன்ற தெய்வவுருவங்களும் அழிக்கப்பட்டன.

இவ்வாறாக ரமதான் மாதம் நபிகளார்(ஸல்) அவர்களின் காலத்தில் பல வெற்றிகளைக் கொண்டதாக இருந்தது. நல்லவற்றை ஏற்று தீமையை ஒதுக்கித்தள்ளி தமது உடல் பொருள் ஆவி அனைத்தையும் அல்லாஹ்(சுபு)வின் வார்த்தைகளை மெய்ப்படுத்திஇஸ்லாமை ஒரு மேன்மையான தீனாக நடைமுறைப்படுத்த விழைந்தனர். நபிகளாரின்(ஸல்) மறைவிற்குப்பிறகு முஸ்லிம்கள் அந்த சுன்னாவை தொடர்ந்தனர். இவ்வாறாகரமதான் மாதம் பல முக்கிய நிகழ்வுகளை தம்மிடத்தே கொண்டதாக இருந்தது.

ஹிஜ்ராவின் 92 ஆண்டுகட்குப்பிறகு ரமதான் மாதத்தில் வடஆப்பிரிக்காவின் உமையத் ஆளுநரான மூசா இப்ன் நுசைர் என்பவர் தன்; வீரமிக்க தளபதியான தாரிக் இப்ன் சையத் உடன் சேர்ந்து ஸ்பெயின், சிசிலி மற்றும் ஃபிரான்சின் ஒரு பகுதியை இஸ்லாமிய அரசுடன்இணைத்தனர். இது அப்பகுதிகளின்(அல்-அந்தலுஸ்) பொற்காலத்தின் தொடக்கமாயிற்று.இங்கு முஸ்லிம்கள் 700 ஆண்டுகட்கும் மேலாக ஆண்டனர்.

682ம் ஹிஜிரி சலாஹ_தீன் அல் அய்யூபி சிலுவைப்போர்ப் படைவீரர்களை சிரியாவினின்றும் விரட்டியடித்து ஆக்கிரமிப்பிலிருந்த அனைத்துப் பகுதிகளையும் ரமதான் மாதத்தில் விடுவித்தார்.

ஹிஜிரி ஏழாம் நு}ற்றாண்டில் மங்கோலியர்கள் ஆசியா முழுவதும் தமது ஆதிக்கத்தை பரப்பினர். செங்கிஸ்கான் தன்னை மனிதகுலத்தின் பாவத்திற்காக தண்டிக்கும் கடவுளின் சாட்டை எனக் கருதினான். 617 ஹிஜிரியில் சமர்க்கண்ட், ரே, ஹம்தான் போன்ற பகுதிகள் அவனின் வாள் வீச்சிற்கு 70,000 மக்கட்கும் மேலானோர் கொல்லப்பட்டனர்.656ஹிஜிரி யில் செங்கிஸ்கானின் பேரனான ஹ_லாகு அப்பேரழிவினைத் தொடர்ந்தான்.இஸ்லாமிய அரசின் தலைநகரான பாக்தாதும் இதிலிருந்து தப்பவில்லை. இப்படையெடுப்பில்1,800,000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கிறிஸ்தவர்களும்முஸ்லிம்களும் சொல்லொணாத் துயரங்கட்கு ஆட்படுத்தப்பட்டனர். மசூதிகளில் மதுபானம்தெளிக்கப்பட்டது. தொழுகைக்கு அதான்(பாங்கு) சொல்வதும் தடைசெய்யப்பட்டது.

இத்தகைய கொடுமைகட்கு மத்தியில் இஸ்லாமிய பகுதிகள் அனைத்துமே அதே நிலைக்கு ஆளாகிவிடலாம் என்ற நிலையில் ஸைபுதீன் குத்ஸ் என்பவர் முஸ்லிம் படையை ஒருங்கிணைத்து ஐன் ஜலுத் எனுமிடத்தில் 26ம் ரமதான் 658ல் மங்கோலியப் படையை வீழ்;த்தினார். இறைவனது உதவியால் கிட்டிய இவ்வெற்றியினால் முழு உலகும் நிம்மதிப்பெருமூச்சுவிட்டது.

இதுவே ரமதான் மாதம் தரும் ஊக்கமாகும். இந்த ஊக்கத்தின் காரணமாகவே நமது முன்னோர்கள் சவாலாகத்தோன்றிய செயல்களையும் செவ்வெனே செய்து முடித்தனர். பகலை போர்க்களத்திலும், இரவை இறைவனிடம் இறைஞ்சியும் அவர்கள் தமது ரமதானை கழித்தனர்.

இன்றைய காலகட்டத்தில் இஸ்லாமிய உலகமானது அன்னிய ஆக்கிரமிப்புகளாலும், தாக்குதல்களாலும், பரவலான ஊழல் மிக்க கொடுங்கோல் ஆட்சியாலும் வியாபிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கட்கு எதிரான போரானது முழு வீச்சில் நடைபெறுகிறது. ஆகவே இறைவனின் விசுவாசிகளே எழுச்சி கொள்வீராக. நபிகளாரும்(ஸல்), சஹாபா பெருமக்களும், தாரிக் இப்ன் சையித், குத்து}ஸ், சலாஹ_தீன் போன்றோரும் காட்டிய வழியில் சென்று வெற்றி காணப்பாடுபடுவீர். இறைமறுப்பாளர்கள் அச்சுறுத்தலுக்கு அடிபணியாமல் இருந்து, இறைவிசுவாசிகளிடம் அன்புடன் நடந்து முழுமையான நோன்பு நோற்று ரமதானில் இறையருளை பெருவீராக.

அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ்(சுபு), கிலாஃபாவை மறுபடியும் நிலைநாட்டி இஸ்லாத்தை உலகெங்கும் பரவச்செய்யும் தலைமுறையில் நம்மை ஆக்கியருள்வானாக. அதற்கான முறையான அடித்தளத்தை அமைக்க நமக்கு ஊக்கமும் சக்தியும் அளிப்பானாக! ஆமீன்!

முஸ்லிம் பெண்களுக்கு - ரமளான் டிப்ஸ்


வருடந்தோரும் நம்மையெல்லாம் சந்தித்து விட்டு செல்லும் ஒரு வசந்தமான மாதம் தான் நோன்பு மாதம். நம்மில் நிறைய பேர் மற்ற மாதங்களைப் போல இந்த புனித மாதத்தையும் சராசரியாகவே கழித்து விட்டு போய் விடுகிறார்கள். அல்லாஹ்வின் பால் நம்மை நெருக்கிக் கொள்வதற்கான நிறைய வழி முறைகள் இந்த மாதத்தில் உண்டு. நாம் இந்த மாதத்திற்குரிய அட்டவனையை திட்டமிட்டு தொகுத்துக் கொண்டால் ரமளான் மாதத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

1 - இந்த மாதத்தை சிறந்த முறையில் கழிக்க வேண்டும் என்ற எண்ணத்தை முதலில் வலுப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால் எண்ணம் போல் தான் வாழ்வு. உறுதி இல்லாமல் ஏனோ தானோ வென்று அந்த மாதத்திற்குள் நுழைந்தால் நாட்கள் சொல்லிக் கொள்ளாமல் அதன் வழியில் பறந்து விடும். அதனால் அந்த நாட்களை எப்படி பயன்படுத்துவது என்ற எண்ணமும் உறுதியும் ரொம்ப அவசியம்.

2 - ரமளான் பிறையை பார்த்தவுடன் முதல் வேலையாக நாமெல்லாம் ஸஹர் உணவிற்கான ஏற்பாட்டில் மள மளவென்று இறங்கி விடுவோம். தேவைதான் ஆனாலும் இந்த ஆண்டிலிருந்து அதை கொஞ்சம் வித்தியாசப்படுத்திக் கொள்வோம். ரமளான் பிறை தெரிந்ததும் சாப்பாட்டு வேலையை ஒரு, ஒருமணி நேரம் தள்ளி வைத்துவிட்டு எந்த வேலை இருந்தாலும் அதை கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு ரமளானை வரவேற்கும் முகமாக முதல் வேலையாக குர்ஆனை கையில் எடுப்போம் - பிறை தெரிந்தவுடன் குர்ஆன் நம் கைக்கு வந்து விட வேண்டும் - குர்ஆன் இறங்கி இந்த மாதத்தை சிறப்புற செய்தது மாதிரி குர்ஆன் ஓதி இந்த மாதத்தை நாம் சிறப்புற செய்வோம். குறைந்தது 50 வசனங்களையாவது முதன் முதலில் ஓதி அதன் அர்த்தத்தை படித்து விட்டு பிறகு ஸஹர் உணவு வேலைக்கு இறங்குவோம். நீங்கள் இப்படி செய்துப் பாருங்கள் இந்த ஆண்டு ஒரு புது அனுபவத்தையும் மன நிம்மதியையும் பெற்றிருப்பதை உணர்வீர்கள்.

3 - இந்த ஆண்டு எப்படியாவது முழு குர்ஆனையும் அர்த்தத்துடன் ஓதி முடித்து விட வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விடுங்கள்.

4 - ஸஹர் செய்து விட்டு சுப்ஹ் தொழாமல் படுத்துவிடும் பெண்கள் நிறைய இருக்கிறார்கள். இது பெரும் மன வேதனயான போக்காகும். நடு ஜாமத்தில் வாய்க்கு ருசியாக வயிறு நிறைய உண்டு விட்டு தூங்குவதற்கா இறைவன் நோன்பை கடமையாக்கியுள்ளான்? தயவு செய்து அந்த போக்கை மாற்றிக் கொள்ளுங்கள். இரவு உணவிற்கு பிறகு ஸஹர் வேலையை முடித்து விட்டு நேரத்துடன் படுத்து விட்டால் (இஷா - மற்றும் இரவுத் தொழுகைக்கு பிறகு டி.வி பார்ப்பதை ரமளானில் கட்டாயம் தவிருங்கள் அது நம் இரவு தூக்கத்தை கெடுத்து நேரத்தை பாழ்படுத்தி நல் அமல் செய்ய முடியாமல் தடுத்துவிடும்) ஸஹர் உணவு நேரத்தில் எழலாம். அல்லது சுட சுட சாப்பிட வேண்டும் என்றால் இன்னும் முன்னமே படுத்துவிட்டு காலையில் 3 மணி வாக்கில் எழுந்து சமைக்கலாம். தூக்கம் கிடைத்து விட்டதால் காலையில் எழுவதற்கு கல கலவென்று இருக்கும் உணவும் சூடாக கிடைக்கும் எல்லாவற்றிற்கும் மேலாக சுப்ஹ் தொழுகை தவறாமல் கிடைத்துவிடும்.

5 - ஸஹர் நேரத்தில் டிவியில் ஒளிப்பரப்பப்படுவதற்காக நிறைய இஸ்லாமிய நிகழ்சிகள் தயார் நிலையில் உள்ளன. இரவுத் தொழுகைக்கு பிறகு நேரத்தோடு தூங்கி காலையில் எழுந்தால் சமைத்துக் கொண்டே - அல்லது உணவு உண்டுக் கொண்டே இந்த நிகழ்சிகள் அனைத்தையும் பார்த்து விடலாம். இந்த வருடம் நிறைய அறிஞர்கள் பேச இருக்கிறார்கள். நிகழ்சியை தவறாமல் காணுங்கள். அதில் நமக்கு நாம் தெரிந்துக் கொள்ள வேண்டிய இஸ்லாமிய செய்திகள் ஏராளமாக கிடைக்கும்.

6 - சுப்ஹூக்கு பிறகு அடுத்த தூக்கம் தூங்க வேண்டி இருப்பதால் எண்ணெய் அதிகம் உள்ள உணவுப் பொருட்களை தவிர்க்கலாம். இல்லையெனில் அவை தேவையில்லாத கொழுப்பு சத்துக்களை நம் உடம்பில் உருவாக்கி விடும்.

7 - சுப்ஹூக்கு பிறகு வேறு எதுவும் வேலை இல்லை என்றால் ளுஹர் தொழுகை வரைக்கூட தூங்கலாம். குழந்தைகளை கவனிக்க வேண்டி இருந்தால் நேரத்துடன் எழ வேண்டி இருக்கும். அதனால் நேரக் கட்டுப்பாடு என்பது நம்மைப் போன்ற குடும்பப் பெண்களை பொருத்தவரை ரொம்பவும் அவசியம்.

8 - ளுஹர் தொழுகையில் உங்கள் வீட்டு சூழ்நிலையை கவனியுங்கள். நோன்பு வைத்துக் கொண்டு கணவரோ - சகோதரர்களோ - மகன்களோ தொழப் போகாமல் இருந்தால் அவர்களுக்கு தொழுகையை ஞாபகமூட்டி பள்ளிக்கு அனுப்பிவையுங்கள். உங்களோடு சேர்த்து வீட்டிலிருக்கும் மற்றப் பெண்களையும் தொழ தூண்டுங்கள்.

9 - ளுஹரிலிருந்து அஸர் தொழுகை வரை ஓய்வுக்குரிய நேரம் என்பதால் அந்த நேரத்தில் ஒரு பகுதியை குர்ஆனுக்காக ஒதுக்கலாம் - ஒதுக்க வேண்டும். தமிழ் அர்த்தத்தைப் படித்து சிந்திப்பதான் வாயிலாக அல்லாஹ் நம்முடன் பேசும் அந்த அற்புதத்தை காணலாம். சில வசனங்களை உங்கள் கணவர்களிடம் காட்டி அதன் விளக்கத்தைக் கேளுங்கள். இந்த சிறு தூண்டுதலின் வழியாக கணவர்களுக்கும் குர்ஆனுடன் தொடர்பு ஏற்படும். நல்லக் கணவர்களுக்கு உண்மையில் நீங்கள் கேட்கும் வசனங்களுக்கு அர்த்தம் புரியாவிட்டாலும் வெளியில் செல்லும் வேலைகளில் யாரிடமாவது கேட்பார்கள். நன்மைக்கான இந்த ஞாபக மூட்டலின் மூலம் வெளியிலிருக்கும் பலரும் கூட பயன் பெறும் வாய்ப்புள்ளது.

10 - அஸர் தொழுகைக்குப் பின் நோன்பு திறக்கும் ஆவலில் சமையலில் இறங்கி விடுவோம். நீண்ட நேரம் காலி வயிறாக இருந்து விட்டு மீண்டும் சாப்பிடுவதால் கடின உணவையும் எண்ணெய் வஸ்துக்களையும் நோன்பு திறக்கும் போது தவிர்க்கலாம். போண்டா, பஜ்ஜி, வடை என்று எண்ணெய் வஸ்த்துக்களே நம் வீடுகளில் நிறைய செய்து சாப்பிடுவோம். இவற்றை நோன்பு திறந்து நேரம் கழித்து சாப்பிடலாம்.

11 - இது நோன்பு மாதம் என்பதால் மிஸ்கீன்கள் நம் வீடுகளுக்கு தவறாமல் வரும் வாய்ப்புள்ளது. அப்படி வரும் மிஸ்கீன்களின் உள்ளத்தில் என்ன நம்பிக்கை இருக்கும் தெரியுமா..? 'இது புனிதமான ரமளான் மாதம் அதனால் நமக்கு நிறைய தர்மம் கிடைக்கும்' என்ற நம்பிக்கை இருக்கும். இந்த நம்பிக்கையை பல-பல வீடுகளில் பொய்பித்து விடுகிறார்கள். வீடு தேடி வரும் ஏழைகள் மீது எரிந்து விழுவார்கள். முகத்தில் அடித்தார் போல் பேசி அனுப்பி விடுவார்கள். வீடு வீடாக கையேந்தும் அந்த ஏழைகளின் மனம் எவ்வளவு கஷ்டப்படும் என்பதையெல்லாம் இவர்கள் சிந்திப்பதே இல்லை. நாம் கொடுக்கும் தர்மத்தால் நம் வீட்டில் கடன் சுமை ஏறிப்போய் விடாது. இது நன்மையை வாரி வழங்கும் மாதம் என்பதால் நாம் வழங்கும் தர்மங்களால் பல நூறு மடங்கு அல்லாஹ்விடம் நமக்கு வெகுமதி காத்திருக்கிறது என்பதை நாம் மறந்து விடக் கூடாது. ரமளான் மாதம் வந்து விட்டால் நமது தலைவர் முஹம்மத்(ஸல்) அவர்கள் வரித்துக் கட்டிக் கொண்டு நன்மையை செய்ய இறங்கி விடுவார்கள். வேகமாக வீசும் காற்றை விட அவர்களின் தர்மமும் நற் செயல்களும் துரிதமாக இருக்கும் என்றெல்லாம் அவர்களின் தோழர்கள் அறிவிக்கும் ஹதீஸ்களை நாம் பார்க்கிறோம். அவர்கள் அளவிற்கு நம்மால் செய்ய முடியாவிட்டாலும் கூட நம்மால் முடிந்த அளவு செய்ய வேண்டும் - செய்யும் பக்குவத்தை இந்த ரமளான் முதல் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

12 - ரமளானின் கடைசி பத்து நாட்களில் லைலத்துல் கத்ர் எனும் மிக முக்கியமான ஒரு இரவு நம்மையெல்லாம் சந்திக்க இருக்கின்றது. அந்த ஒரு இரவு மட்டும் ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவாகும் என்று அல்லாஹ் குர்ஆனில் கூறி இருக்கிறான். நம்மால் பள்ளிகளில் சென்று இரவுத் தங்கி அந்த இரவைப் பெற முடியாவிட்டாலும் நம் வீடுகளில் இருந்து அந்த இரவை எதிர்பார்க்கலாம். கடைசி பத்து நாட்களின் இரவு வேலைகளில் நீண்ட நேரம் தொழுவது - அல்லாஹ்வை திக்ர் செய்வது - குர்ஆன் ஓதுவது - அவனிடம் கையேந்தி நம் தேவைகளை முறையிட்டு மறக்காமல் முஸ்லிம் சமுதாய நலனுக்காகவும் நமது மறுமை வெற்றிக்காகவும் பிரார்த்திப்பது போன்ற காரியங்களில் ஈடுபடலாம். அடுத்த வருட ரமளானட வரை வாழ்வோம் என்பது உறுதி இல்லை என்பதால் இந்த வருட லைலத்துல் கத்ரை அலட்சியப்படுத்தி விட வேண்டாம்.

13 - 'பெருநாள்' நமக்கெல்லாம் மகிழ்சிகரமான நாள். புது உடைகளை உடுத்துவதில் உள்ளம் குதூகளிக்கும். அதற்காக பல ஜவுளிக் கடைகளை ஏறி இறங்கி பல மணி நேரத்தை செலவிட்டு புடவை எடுப்போம். மனதிற்கு பிடித்தமாதிரி புடவை அமைந்து விட்டால் பூரிப்பு இன்னும் அதிகரிக்கும். அன்றைய தினம் நம் இல்லங்களில் தாய் - தந்தை - அண்ணன் - தம்பி - அக்காள் - தங்கை - கணவர் - குழந்தைகள் என்று எல்லோரும் புது ஆடை உடுத்தி மகிழ்சிக் கடலில் மூழ்கி இருக்கும் போது எத்துனையோ ஏழைகள் இதற்கு வழியில்லாமல் சோகத்துடனும் மன சுமைகளுடனும் தம் வீடுகளில் அடைந்து கிடப்பார்கள். அந்த சந்தோஷமான நாளை வெளியில் சென்று அவர்களால் கொண்டாட முடியாது. இருக்கும் மொத்த ஏழைகளுக்கும் நம்மால் உடை எடுத்துக் கொடுக்க முடியாது - (பொருளாதார வசதி இருந்தால் நம் பெண்களில் பலர் நிறைய செய்வார்கள்) அதனால் நாம் உடை எடுக்கும் போது புடவையின் விலையை கொஞ்சம் குறைத்து ஒன்று அல்லது இரண்டு ஏழைப் பெண்களுக்கு இரண்டு புடவை எடுத்துக் கொடுக்கலாம். நம் புது ஆடை உடுத்தும் அதே வேலையில் அந்த பெண்களும் நம் மூலம் புது சேலை உடுத்துவார்கள். அன்றைய தினம் முழுவதும் அவர்களின் எண்ணமெல்லாம் நீங்கள் தான் இருப்பீர்கள். அந்த ஏழைகளின் சந்தோஷத்தில் அல்லாஹ்வின் சந்தோஷம் கிடைக்காதா...

14 - நம்மில் நிறையப் பெண்கள் தொடர்ந்து தவறவிடும் - ஆனால் தவற விடக் கூடாத - தொழுகை பெருநாள் தொழுகை. இந்த ஆண்டு அதை விட்டுவிடாதீர்கள். ஏனெனில் ஆண்டுக்கொரு முறை மட்டும் தொழும் தொழுகையாகும் அது.

இந்த புனித ரமளானை அல்லாஹ் விரும்பக் கூடிய விதத்தில் நாமெல்லாம் அமைத்துக் கொள்ள உங்களுக்காக நானும் பிரார்த்திக்கிறேன் எனக்காக நீங்களும் பிரார்த்தியுங்கள்.

ஒன்றுக்கு பத்து முதல் எழு நூறு மடங்கு வரை கூலி கொடுக்கப்படும் மாதம்


ஒவ்வொரு முஸ்லிமும் நோன்பின் முழுமையான பயனை அடைவதற்காக

ஆஷூரா நோன்பின் சிறப்பும்!


நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா நோன்பு நோற்பதை நமக்கு சுன்னத்தாக ஆக்கியிருக்கிறார்கள்.

நோன்பு - தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்



நோன்பு - தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்

o நோன்பை முறிக்கும் செயல்களை மறதியாகச் செய்தல்
o மனைவியுடன் நோன்பாளி நெருக்கமாக இருப்பது

வியாழக்கிழமை நோன்பு வைக்கலாமா?


வாரத்தில் திங்கட் கிழமையும் வியாக்கிழமையும் நோன்பு நோற்பது நபிவழியாகும்.

சுப்ஹுக்கு முன் நோன்புக்கான நிய்யத் அவசியமா


சுப்ஹுக்கு முன் தீர்மானிக்காவிட்டால் நோன்பாகாது என்ற ஹதீஸ் பலவீனமானது என்று சிலர்