அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தேசியவாதம்

கடந்த 200 வருடகாலமாக மேலைத்தேய நாடுகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ள இஸ்லாமிய தேசங்கள் பாரிய வீழ்ச்சியையும் பின்னடைவையும் தழுவியுள்ளன. இந்நிலையிலிருந்து விடுபடுவதற்கும் எழுச்சிப் பாதையில் வெற்றி நடைபோடுவதற்கும் முஸ்லிம்கள் பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக முஸ்லிம்கள் மேலைத்தேய அரசியற் கருத்துகளின் அடிப்படையிலேயே தங்கள் விடுதலைப் போராட்டத்தை மேற்கொண்டனர். இக் கருத்துகளிற் பிரதானமானது தேசியவாதமாகும்.

தேசியவாதம் இஸ்லாத்திற்கு முரணான ஒரு கருத்து ஆகும். இரண்டாம் உலக மகாயுத்த காலங்களின்போது முதன் முறையாக அரபுத் தேசியவாதம் தலை து}க்கியது. இதன் வெற்றுக்கோசங்களினால் முஸ்லிம்கள் கவரப்பட்டிருந்த போதிலும் 1950ம் ஆண்டு காலப்பகுதிகளில் தேசியவாதக் கருத்திற்கு ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து முஸ்லிம்கள் தங்களின் விடுதலைக்கான சரியான வழியை இஸ்லாத்திலிருந்து தேட ஆரம்பித்தனர்.

ஓரு தேசத்தின் சிந்தனைத்தரம் நலிவடைகின்ற போது அத்தேசத்தில் தரமற்ற வாழ்க்கை பிணைப்புகளும் (bonds) சமூகப் பெறுமானங்களும் (values) தலை து}க்குகின்றன. இந்த வாழ்க்கை பிணைப்புகள் உயிர் வாழ்தல் என்ற உணர்வை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டதாகவும் விலங்குகளில் காணப்படுகின்ற வாழ்க்கை பிணைப்புகளை ஒத்ததாகவும் காணப்படுகின்றன. இவை வெறும் உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டதும் அடிக்கடி மாறக்கூடியதும் நிலையற்றதுமாக இருக்கின்றன. உதாரணமாக ஒரு தேசத்தின் மீது வெளிநாட்டு அக்கிரமிப்பு இருக்கின்ற போது அதிகமாகக் காணப்படுகின்ற இந்த வாழ்க்கை பிணைப்புகள் சமாதான காலங்களின்போது உணரப்படுவதில்லை. இவற்றில் மிகப்பிரதானமானவை தேசப்பற்றும் தேசியவாதமும் ஆகும்.

தேசப்பற்று என்பது ஒரு நிலப்பிரதேசத்தையும் அங்கு வசிக்கின்ற மக்களையும் இணைக்கின்ற ஒரு பிணைப்பு ஆகும். அதேபோல் தேசியவாதம் என்பது மனிதர்களுக்குள் காணப்படுகின்ற ஆதிக்க உணர்வின் வெளிப்பாடு ஆகும். ஒரு மனிதன் தனது ஆதிக்கத்தை தனது குடும்பம் அயலவர்கள் பின்னர் ஒரு பாரிய பிரதேசத்தவர்கள் என்று விரிவு படுத்துகின்றபோது தேசியவாதம் தலை து}க்குகின்றது. ஆதிக்க உணர்வு என்பது ஆதிக்கம் செலுத்தப்படுகின்றவர்களுக்கு மத்தியிலும் காணப்படும் ஒரு உணர்வு என்பதால் இது எப்பொழுதும் முரண்பாடுகளுக்கும் போராட்டங்களுக்குமே வழிகோலுகின்றது. எனவே இந்த வாழ்க்கைப்பிணைப்பு (தேசியவாதம்) மனிதாபிமானமற்றதும் இனவாதத்திற்கு வழி கோலுவதும் தரக்குறைவான சிந்தனையின் வெளிப்பாடுமாகும்.

அதுமட்டுமல்லாது தேசியவாதம் மனிதவாழ்க்கையை ஒழுங்குபடுத்தும் ஒரு வாழ்க்கை முறையையும் (ideology) மனிதர்களுக்கு வழங்குவதில்லை. எனவேதான் தேசிய சமத்துவம் (socialism) மற்றும் தேசிய முதலாளித்துவம் என்பவற்றை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. எனவே ஒரு சமுகத்தில் காணப்படவேண்டிய சரியான வாழ்க்கை பிணைப்பு வெறும் உணர்ச்சிகளை மாத்திரம் அடிப்படையாக கொண்டிராமல் அறிவார்ந்த அடிப்படையில் இருக்க வேண்டும். இஸ்லாமிய வாழ்க்கை பிணைப்பு என்பது அல்லாஹ்(சுபு)விடம் இருந்து இறக்கப்பட்டதும், அறிவார்ந்த அடிப்படையைக் கொண்டதும், சரியானதும் ஆகும். இஸ்லாமிய வாழ்க்கை பிணைப்பு நிறுவப்படுகின்ற போது இரத்தம், பிரதேசம் அல்லது ஆதிக்க உணர்வு என்பவற்றை அடிப்படடையாகக் கொண்ட பிழையான வாழ்க்கை பிணைப்புகள் அகற்றப்பட்டு விடுகின்றன. அல்லாஹ் திருக் குர்ஆனிலே கூறுகின்றான்.

“கூறுவீராக! உங்களுடைய தந்தைகளும், ஆண் மக்களும், சகோதரர்களும், மனைவியரும், குடும்பத்தினரும், சம்பாத்தியங்களும், நீங்கள் நஷ்டத்தைப் பயப்படுகின்ற வியாபாரமும், நீங்கள் விரும்புகின்ற வீடுகளும், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும், அவனுடைய பாதையில் போர் செய்வதையம் விட உங்களுக்கு விருப்பமானவைகளாக இருந்தால் அப்போது நீங்கள் (தண்டனையைப்பற்றிய) அல்லாஹ்வுடைய கட்டளை வரும் வரையில் எதிர்பார்த்திருங்கள். மேலும் பாவிகளான கூட்டத்தினரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்தவும் மாட்டான்.” (9-24)

இஸ்லாம் மாத்திரமே மனித இனத்திற்கான ஒரேயொரு சரியான வாழ்க்கைத்திட்டம். சோசலிஸம், முதலாளித்துவம் அனைத்துமே பிழையான வாழ்க்கைத்திட்டங்களே ஆகும். இரத்தப்பிணைப்பு பிரதேசப்பிணைப்பு போன்றவற்றிலிருந்து மனிதனுக்கு விடுதலையளிப்பதன் முலம் அவனுடைய அந்தஸ்தை உயர்த்துவதற்காகவே இஸ்லாம் இறக்கப்பட்டது. ஓரு முஸ்லிம் எந்தத் தேசத்தைக் கொண்டும் அடையாளம் காணப்படுவதில்லை. இறைசட்டம் (ஷரீஆ) அமுல்படுத்தப் படுகின்ற நிலம் மாத்திரமே ஒரு முஸ்லிமுக்குரிய தேசம். இஸ்லாமிய நம்பிக்கையைக்கொண்டு மாத்திரமே அவன் அடையாளம் காணப்படுவான். ஓரு முஸ்லிமின் சொந்தக்காரர்கள் இறை விசுவாசம் கொண்டவர்கள் மாத்திரமே. எனவே ஓரு முஸ்லிமுக்கு தாய் சகோதரர்கள் மனைவியர் மற்றும் ஏனைய குடும்ப உறுப்பினர்களிடம் கூட எந்த உறவும் கிடையாது, அவர்கள் முஸ்லிம்களாக இருந்தால் தவிர. எனவே இஸ்லாமிய நம்பிக்கையின் அடிப்படையிலே முஸ்லிம்கள் எல்லோரும் இணைக்கப்படுவார்கள்.

“மனிதர்களே நீங்கள் உங்கள் இரட்சகனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள். அவன் உங்களை ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான். அதிலிருந்து அதற்குரிய ஜோடியையும் படைத்தான். இன்னும் அவ்விருவரிலிருந்தும் அனேக ஆண்களையும் பெண்களையும் பரவச்செய்தான். நீங்கள் எவனைக்கொண்டு உங்களுக்குரிய உரிமைகளைக் கேட்டுக்கொள்கின்றீர்களோ அவனையும் இரத்த சொந்தங்களைத் துண்டித்து விடுவதையும் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.” (4-1)

“நபியே உமதிரட்சகன் அவனைத்தவிர மற்றெவரையும் நீங்கள் வணங்கக்கூடாதென்றும் பெற்றோருக்கு உபகாரம் செய்ய வேண்டுமென்றும் கட்டளையிட்டிருக்கின்றான். அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவ்விருவருமோ திண்ணமாக முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவருக்கும் ‘சீ’ என்று கூட சொல்ல வேண்டாம். அவ்விருவரையம் விரட்டி விடவும் வேண்டாம். அவ்விருவருக்கும் மரியாதையான வார்த்தையைக் கூறுவீராக” (17-23)

இந்தக் குர்ஆன் வசனங்களின் விளக்கம் என்னவென்றால் ஒரு முஸ்லிமுக்கு தன் பெற்றோர் மீது அன்பு காட்டுவது அவசியமானதுதான். என்றாலும் இஸ்லாத்தின் விரோதிகளுடன் அவர்கள் வெளிப்படையான தொடர்பை வைத்திருந்தால் அவர்களுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்குமிடையில் எந்த உறவும் கிடையாது. அவர்களின் மீது அன்பு காட்டவேண்டிய அவசியமும் கிடையாது.

அப்துல்லாஹ் இப்னு அப்துல்லாஹ் இப்னு ஸைத் அறிவிக்கின்றார்கள்.

நபி(ஸல்)அவர்கள் அப்துல்லாஹ் இப்னு அப்துல்லாஹ் இப்னு உபை (ரலி) அவர்களை அழைத்துக்கேட்டார்கள்- “உங்களின் தந்தை என்ன கூறினார் என்று தெரியுமா?" அப்துல்லாஹ் (ரலி) கேட்டார்கள் “எனது பெற்றோர் உங்களுக்குக் காணிக்கையாகட்டும். எனது தந்தை என்ன கூறினார்?" அதற்கு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் “நாங்கள் மதீனாவிற்குத் திரும்பினால் கண்ணியம் மிக்கவர்கள் வெறுக்கப்படுபவர்களை விரட்டியடிப்பார்கள்." அதற்கு அப்துல்லாஹ் (ரலி) கூறினார்கள் “இறை தூதரே அல்லாஹ் மீது சத்தியமாக அவர் உண்மையையே கூறினார். நீங்கள்தான் கண்ணியத்திற்குரியவர். அவர்தான் வெறுக்கப்படுபவர். “இறை தூதரே நீங்கள் மதீனாவிற்கு வருவதற்கு முன்பு என்னை விடவும் தந்தைக்கு அதிகமான கீழ்ப்படிவு உள்ளவர் வேறு எவருமில்லை என்பதை மதீனாவாசிகள் அறிவார்கள். ஆனால் இப்பொது அல்லாஹ்வும் அவனுடைய து}தரும் விரும்பினால் நான் அவருடைய தலையைத் துண்டாடுவேன்." எனக்கூறினார்கள். இதற்கு நபி(ஸல்) அவர்கள் மறுப்புத்தெரிவித்தார்கள்.

முஸ்லிம்கள் மதீனாவிற்குத்திரும்பிய போது மதீனா வாசலிலே தனது தந்தையைத் தடுத்து நிறுத்திய அப்துல்லாஹ்(ரலி) அவர்கள் தமது வாளை உருவி தந்தையின் தலைக்கு மேல் பிடித்தவர்களாகக் கூறினார்கள் “நாங்கள் மதீனாவிற்குத் திரும்பினால் கண்ணியம் மிக்கவர்கள் வெறுக்கப்படுபவர்களை விரட்டியடிப்பார்கள் என்று கூறினீர்களா? கண்ணியம் இறை து}தருக்குரியதா அல்லது உமக்குரியதா? என்பதை நீங்கள் இப்போது விளங்கிக் கொள்வீர்கள். அல்லாஹ்வும் அவனுடைய து}தரும் அனுமதி தரும் வரை சத்தியமாக நான் உங்களை மதீனாவிற்குள் அனுமதிக்கவும் மாட்டேன் அடைக்கலம் தரவும்மாட்டேன்" இதனைக்கேட்ட இப்னு உபை இரு முறை சப்தமிட்டுக் கூறினார்கள், ஹஸ்ரஜ் கூட்டத்தினரே எனது மகன் எனது வீட்டை விட்டும் என்னைத் தடுப்பதைப்பாருங்கள்." எத்தனையோ ஸஹாபாக்கள் கெஞ்சிக்கேட்டும் கூட அப்துல்லாஹ்(ரலி) அவர்கள் விட்டுக்கொடுக்கவில்லை. இந்தச்செய்தி முஹம்மத்(ஸல்) அவர்களின் காதுகளை எட்டியது. கடைசியாக இப்னு உபையை அனுமதிக்கும்படி முஹம்மத்(ஸல்) அவர்களிடமிருந்து உத்தரவு வந்ததன் பின்னரே “நபி(ஸல்) அவர்களிடமிருந்து அனுமதி வந்திருப்பதால் உங்களை மதீனாவிற்குள் அனுமதிக்கின்றேன்" என்று கூறி தமது தந்தையை மதீனாவிற்குள் அனுமதித்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தங்கள் மாமா அபு லஹப் தங்கள் சகோதரர் அபு ஜஹ்ல் போன்றவர்களின் இரத்த உறவைத் துண்டித்திருந்தமையும், அரேபியாவைச் சேர்ந்த முஹம்மத்(ஸல்) ரோமைச் சேர்ந்த சுஹைல் அபீஸீனியாவைச் சேர்ந்த பிலால் பாரசீகத்தைச் சேர்ந்த ஸல்மான் போன்றவர்கள் சகோதரர்களாக இருந்தமையும் வெளிப்படையான உண்மைகளாகும்.
ஓ முஸ்லீம்களே! ஈமானியக் கொடியின் கீழ் மாத்திரமே வெற்றி கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். எமது போராட்டத்தின் இலக்கு இறை திருப்தியும் அல்லாஹ்வினுடைய சட்டங்களை நிலை நாட்டுவதும் இஸ்லாத்தைப் பாதுகாப்பதும் மாத்திரம் தான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். நமது போராட்டத்தின் இலக்கு சொத்துக்காக புகழோ நாட்டின் பெருமையோ இல்லை என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.

அபு முஸா(ரலி) அறிவிக்கின்றார்கள்.

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார்கள் - “ஒரு மனிதர் சொத்துக்காகப் போராடுகின்றார் இன்னும் ஒருவர் புகழுக்காகப் போராடுகின்றார் இவர்களில் அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர் யார்?" இதற்கு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் “அல்லாஹ்வின் சட்டங்களை உயர்வு பெறச் செய்வதற்காகப் போராடுபவர்தான் அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர்"

அல்லாஹ் கூறுகின்றான்

“அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும் சமூகத்தினர், அல்லாஹ்வையும் அவனது து}தரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிப்பவர்களாக (நபியே!) நீர் காணமாட்டீர். அவர்கள் தங்கள் பெற்றோராயினும் தங்கள் புதல்வர்களாயினும் தங்கள் சகோதரர்களாயினும் தங்கள் குடும்பத்தினராயினும் சரியே. (ஏனெனில்) அத்தகையவர்களின் இதயங்களில், (அல்லாஹ்) ஈமானை எழுதி(ப் பதித்து) விட்டான்;. மேலும் அவன் தன்னிடமிருந்து (அருள் என்னும்) ஆன்மாவைக் கொண்டு பலப்படுத்தியிருக்கிறான். சுவர்க்கச் சோலைகளில் என்றென்றும் இருக்கும்படி அவர்களைப் பிரவேசிக்கச் செய்வான். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான். அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள். அவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர். அறிந்துகொள்க: நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர் தாம் வெற்றி பெறுவார்கள்.”(58:22)

“நபி இப்றாஹீமிலும் அவருடன் இருந்தவர்களிலும் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கின்றது. அவர்கள் தம் சமுகத்தாரிடம் கூறினார்கள் - நிச்சயமாக நாங்கள் உங்களிலிருந்தும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பவைகளில் இருந்தும் விலகி உங்களை நிராகரித்து விட்டோம். இன்னும் அல்லாஹ் ஒருவனையே நீங்கள் விசுவாசங் கொள்ளும் வரை உங்களுக்கும் எங்களுக்கம் இடையில் விரோதமும் வெறுப்பும் என்றென்றும் வெளிப்பட்டுவிட்டது.” ( 60-4)


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

“பிரிவினைவாதம் கெடுதியானது. அதை விட்டு விடுங்கள். பிரிவினை கோருபவன் அதற்காகப் போராடுபவன் அதற்காக உயிர் கொடுப்பவன் எவனும் எம்மைச்சார்ந்தவர்களல்ல.”


எனவே மக்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்துகின்ற தேசியவாதம் என்பது மிகவும் பின்னடைவானதும் இஸ்லாத்திற்கு முரணானதுமான ஒரு வாழ்க்கைப்பிணைப்பு ஆகும்

அதிகரிக்கும் பள்ளிவாசல்களும் அழிந்து போகும் ஒற்றுமையும்!



அரபு பணம் இலங்கையில் வந்து குவிந்துக் கொண்டிருக்கிறது. பாதை நெடுகிலும் 
பள்ளிவாசல்கள் நாளுக்கு நாள் முளைத்துக் கொண்டிருக்கின்றன. விரல் ஆட்ட ஒரு பள்ளிவாசல், விரல் நீட்ட ஒரு பள்ளிவாசல், அது அவர்களின் பள்ளிவாசல், இது இவர்களின் பள்ளிவாசல் முஸ்லிம் சமூகம் முரண்பட்டு , பிரச்சினைப் பட்டு, பிரிந்து கிடக்கிறது.
பாவம் பாமர மக்கள் ! இந்த றியால், தீனார் தஃவா காரர்களின் பின்னணி புரியாமல் நடு வீதியில் தட்டுத் தடுமாறி திணறி நின்றுக்கொண்டிருக்கின்றார்கள்.

ஒற்றுமையை உரத்துப் பேசி பேசி ஒருவரின் உதிரத்தை மற்றவர் உறிஞ்சி உறிஞ்சி குடித்துக் கொண்டிருக்கிறார்கள். வஹாபிஸம் என்ற சஊதி, குவைத் மன்னராட்சியை மறைமுகமாய் பாதுகாக்கின்ற சித்தாந்தம் பொது ம்ககளை மட்டுமல்ல அவர்களிடம் பணம் வாங்கும் கூலிப்பட்டாளத்தைக் கூட குறி வைத்து பிரித்துத் தான் வைத்திருக்கிறது.

இலங்கையைப் பொறுத்தவரை தஃவா களத்தில் இருக்கும் தப்லீக் இயக்கத்தை தவிர ஏனைய அத்தனை இயக்கங்களும் இந்த வஹ்ஹாபி பணத்தில் வாழ்ந்துக் கொண்டிருப்பவையே.
தப்லீக் இயக்கம் தனது தஃவா இயக்க செயற்பாட்டில் பாரிய மாற்றங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற கருத்து பொதுவாக நிலவி வருகிறது. ஆனால் தனது சொந்த பணத்தில் தஃவா செய்கின்ற புனிதத் தன்மையை அது என்றும் பேணிப் பாதுகாத்து வ்ந்திருக்கிறது. அது காசு வழங்குபவனுக்கு கைக்கூலியாய் வேலைசெய்ய வேண்டும் என்ற கட்டாயத்திற்கு உட்படாத ஒரு அமைப்பு.

வஹ்ஹாபி பணத்தில் போஷிக்கப்படும் அத்தனை இயக்கங்களும் நாளுக்கு நாள் முரண்பாட்டை தமக்கிடையே வளர்த்து முரண்பட்டு பிரிந்து செல்வதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.வஹ்ஹாபிப் பணம் வருவதால் இங்கு இஸ்லாம் வளர வில்லை.வன்முறை வளர்ந்திருக்கிறது. ஒற்றுமை குறைந்திருக்கிறது.
இவையெல்லாம் உருவானது தனக்கென தனித்தனி பள்ளிவாசல் உருவாவதன் பின்னால் தான் என்ற உண்மையை நாம் பலாத்கதரமாகவே மறந்தும் இரு்க்கிறோம். தனித்தனி பள்ளிவாசலின் உருவாக்கம் ஒற்றுமையை தவிடுபொடியாக்கி இருக்கிறது.
ஒற்றுமையை சீர்குலைக்கும் தனித் தனி பள்ளிவாசல் கலாசாரத்தை இஸ்லாம் அங்கீகரிக்கின்றதா?

குறைஷிக் காபிர்களால் றசூலுல்லாஹ்விற்கு கஃபாவில் வணங்க தடை வந்த போது மக்காவில் வாழத் தடை வந்த போது நபி (ஸல்) அவர்கள் என்ன செய்தார்கள்?
தனது கொள்கையை மாற்றிக்கொண்டு, கஃபாவை அபூஜஹ்லுக்கும், அபூலஹபுக்கும் கொடுத்துவிட்டு மதீனாவில் கஃபாவைப்போல் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டிக்கொண்டு மறைந்து வாழ்ந்திருக்கலாமே? அப்படி வாழ்ந்திருந்தால் மக்கா வெற்றி என்று ஒன்று வரலாற்றுக்கு வந்திருக்குமா?

றஸுலுல்லாஹ்வின் தஃவா இஸ்லாத்தின் கொடியின் கீழ், ஒரே தலைமைத்துவத்தின் அனைவரையும் ஒன்று திரட்டுவதாகவே இருந்தது. அனைத்து கோத்திரங்களையும், குழுக்களைகயும் , கொள்கைகளையும் ஓரணியில் திரட்டி பிரிவினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.
பிரிவினையையும் பிரச்சினைகளையும் இல்லாதொழிக்கும் மத்திய நிலையங்களாக மஸஜித்கள் செயலாற்றின.
இன்று நிலைமை தலைகீழாக மாறியிருக்கிது. பிரிவினைக்காகவே பள்ளிவாசல்கள் உருவாகின்றன. உருவாக்கப்படுகின்றன.

“அல்லாஹ்வின் கயிற்றைப் பலமாக பற்றிப்பிடியுங்கள். பிரிந்து விடாதீர்கள்” என்று அல்குர்ஆன் அறைகூவல் விடுகிகிறது. அல்லாஹ்வின் இல்லங்களாலேயே நாங்கள் பிளவு பட்டு நிற்கின்றோம். ஒற்றுமையாய் வாழுங்கள் என்ற அல்லாஹ்வின் அறைகூவலையே நாம் அலட்சியப்படுத்தியிருக்கிறோம்.

பிரிவினைக்காகவே உருவாகின்ற இந்த பள்ளிவாசல்களின் பின்னணி என்னவாக இருக்கும் என இதுவரை யாரும் சிந்திக்காமலேயே இருந்து வருகிறோம்.
தஃவா என்ற போர்வையில் நற்செயல்கள் என்ற போலி முலாம் பூசி வந்து சேர்கின்ற இந்த அரபு பணத்தின் பின்னணி என்ன? என்பதை யாரும் சிந்திக்காமல் விட்டதன் விளைவை இலங்கை முஸ்லிம் சமூகம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
தனத நாட்டில் இஸ்லாத்தைப் பாதுகாக்க முடியாத அரபிகள்,
தனது நாட்டில் மனித நேயத்தைப் பாதுகாக்காத அரபிகள்
எப்படி மற்றைய நாடுகளில் இஸ்லாத்தைப் பாதுகாக்க முடியும்?

இந்த அரபு நாடுகளில் மஸ்ஜித்கள் ஏராளம் இருக்கின்றன. ஆனால் அவர்களிடம் இஸ்லாம் இருக்கின்றதா? அந்த நாட்டுக்கு பயணம் செய்யும் மாற்று மதத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இஸ்லாத்தின் மீது ஆர்வம் வரும் அளவிற்கு அவர்களின் வாழ்க்கை இருக்கிறதா? இல்லவே இல்லை.

இஸ்லாத்தின் தாயக பூமியை, அரபு பூமியை, மனித நேயத்தாலும், நீதியாலும், நேர்மையாலும் நிரப்பி அல்லாஹ்வின் தீனை பாதுகாக்க முடியாத இவர்களின் பணத்தால் இலங்கையில் இஸ்லாத்தை வளர்க்க முயல்வது மடமையிலும் மடமையன்றோ.
முஸ்லிம்களையே முட்டி மோத வைப்பதால் இஸ்லாம் எப்படி வளரும்? மாற்று மதத்தவருக்கு இஸ்லாத்தின் மீது அச்சம் அல்லவா ஏற்படும்?ஆப்கானிஸ்தானில் தாலிபான்களை உருவாக்கி அமெரிக்காவும் சஊதியும் அதைத்தானே சாதித்தன?
அரபுகள் மடையர்களாக இருக்கலாம், அரபுகளிடமிருந்து பணம் பெறுகின்ற
இஸ்லாமிய இயக்க யாசகர்களும் மடையர்களாக மட்டுமல்ல இஸ்லாத்தின் அடிப்படைக்கே மாறு செய்பவர்களாகவே இருக்கின்றார்கள்.
காரணம், இந்த இயக்கங்கள் அரபு அமெரிக்க செயற்திட்டத்தை தஃவாவின் போர்வையில் மனமுரண்டாக நிறைவேற்றியும் வருகின்றார்கள்.

மற்றும் அரபுகள் இஸ்லாத்தின் மீது பற்று வைத்துள்ளதாய் தோற்றப்பாட்டை உருவாக்கும்,
பள்ளிவாசல்கள் கட்டுதல்,உழ்ஹய்யா கொடுத்தல்,கிணறு வெட்டுதல் போன்ற குறுகிய வேலைத்திட்டத்தை தஃவா என்ற அடைமொழிக்குள் சிக்கவைத்து பிரசாரம் செய்யும் அரபுகளின் இந்த செயற்பாட்டுக்கு பின்னணியில் ஓர் அரசியல் மறைந்து இருக்கிறது.
அது அமெரிக்க ஏகாதிபத்திய அரசியலுக்குள் சிறைபட்டு நிற்கும் சஊதி மன்னராட்சியை பாதுகாக்கும் மகத்தான பணியை செய்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவிற்கு இஸ்லாத்தை உலகிலிருந்து ஒழிக்க வேண்டுமாக இருந்தால் அரபுகளின் மன்னராட்சியை அது பாதுகாத்தே ஆக வேண்டும்.

அரபுகளின் மன்னராட்சி உலகில் நிலைத்து நிற்க வேண்டும் என்றால், இஸ்லாத்தின் ஏக போக உரிமை அரபுகளிடம் இருக்கவேண்டும். அப்போது தான் இஸ்லாம் என்ற போர்வையில் தனக்கு தேவையானவற்றை கூட்டியு்ம், தனக்குதேவையில்லாதவற்றை குறைத்தும், மறைத்தும் கூற முடியும்.

அரபுகளின் நிதி பலத்தில் இஸ்லாமிய தஃவாவை சிறைப்பிடித்து வைப்பதன் மூலம்...

அமெரிக்காவினதும், சஊதியினதும் நன்மைக்காக உலகளாவிய ரீதியில் எழும் இஸ்லாமிய அரசியல் எழுச்சியை அடக்கமுடியும்.

முஸ்லிம்களின் சிந்தனையை அடிப்படை பிரச்சினைகளிலிருந்து வேறு பக்கம் திசை திருப்பி சில்லரை பிரச்சினைகளில் சிக்க வைக்கமுடியும்.

அரபுகளின் அரசியலுக்கேற்ப இஸ்லாத்தை கூட்டியும், குறைத்தும் வடிவமைக்க முடியும்.
இன்று, மத்திய கிழக்கில் தனது ஆதிபத்தியத்தை உறுதிப்படுத்தி, அரபு மண்ணின் எண்ணெய் வளங்களை சூறையாடிக்கொண்டிருக்கும், முஸ்லிம் நாடுகளுக்குள் அத்துமீறி புகுந்து அநியாயம் புரிந்துக்கொண்டிருக்கும் ஏகாதிபத்திய வாதிகளின் அட்டகாங்களை தஃவாவின் போர்வையில் மூடி மறைப்பதற்கு இந்த அரபு பணத்தைப் பெறும் இஸ்லாமிய இயக்கங்கள் நன்றாகவே பயன்படுத்தப் படுகின்றன.

அரபுகளை திருப்தி படுத்தும் இவர்களது தஃவா, பணத்தை மையப்படுத்தி சுழன்று, வியாபார மயப்படுத்தப்பட்ட ஜாஹிலிய்ய சிந்தனையை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது. உயிரோட்டமான இஸ்லாத்தின் கட்டளைகளை பணத்திற்கு தாரை வார்த்து அநியாயங்களையும், அக்கிரமங்களையும் அடக்கி வாசிக்கும் அளவிற்கு காசின் கைதிகளாக இவர்கள் மாற்றப்பட்டிருக்கின்றார்கள்

ஸீறாவை(வரலாறு) கற்பதன் அவசியம்

ஸீறாவை கற்பதன் அவசியம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வு பன்முகங்களைக் கொண்ட ஒரு மாணிக்க கல்லுக்கு ஒப்பானதாகும். ஆதனை எக்கோணத்திலிருந்து நோக்கினாலும் அது ஒளிவிட்டுப் பிரகாசிப்பதைக் காணலாம்.நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சரிதையைப் படிக்கும் ஒருவர் மனித வாழ்வின் எல்லாத்துறைகளையும் தழுவிய வொன்றாக அவர்களின் வாழ்வு அமைந்திருப்பதைக் காண்பார். இந்த வகையிலேயே கடந்த பல நூற்றாண்டு காலமாக பல நூறு ஆய்வாளர்கள் நபியவர்களின் பன்முக ஆளுமையை பல் வேறு கோணங்களில் அணுகி ஆராய்ந்துள்ளதைப் பார்க்கின்றோம்.நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வு தனக்கே உரிய பல தனிப் பெரும் சிறப்புப் பண்புகளைக் கொண்டிருக்கின்றது.

1. அது ஒரு திறந்த புத்தகமாக விளங்குகின்றது. நபிகளாரின் பெற்றோர்களான அப்துல்லாஹ், ஆமினா தம்பதிகளின் திருமணம் முதல் நபியவர்களின் பிறப்பு, குழந்தைப் பருவம், இளமைக் காலம் உட்பட மேற் கொண்ட பயணங்கள் வரை அனைத்தம் மிகவும் துள்ளியமாக, ஆதாரபூர்வமாக பதியப்பட்டுள்ளன. இதனால் தான் சூரிய ஒளியில் பிறந்து வாழ்ந்த ஒரு வரலாற்றுப் புருஷர் என நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஒரு மேற்குலக வரலாற்றாசிரியர் வர்ணிக்கின்றார்.நபியவர்களின் உணவு, உடை, நடை, பாவனை அனைத்தும் மிக நுனுக்கமாக அவதானிக்கப்பட்டு வரலாற்றேடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2. உலகிற்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்களின் வரலாறுகளில் இன்று வரை அழியாமலும் திரிக்கப்படாமலும் இடைச் செருகல்களில் சிக்காமலும் நம்பகமாகக் கிடைக்கின்ற ஒரு வரலாறு என்ற வகையிலும் நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வு சிறப்பிடம் பெறுகின்றது.

3. நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சரிதை இறைத்தூதைப் பெற்ற ஒரு மனிதனின் வரலாறாகவே எமக்குக் கிடைக்கின்றது. அவர்களை ஒரு தெய்வமாகவோ, தெய்வீகப் பிறவியாகவோ சித்தரிக்கும் முயற்சி அங்கே மேற்கொள்ளப்படவில்லை. அவர்கள் ஒரு மனிதனாகப் பிறந்து ஒரு முன்மாதிரியான மனிதனாக வாழ்ந்துக் காட்டினார்கள். இதனால் தான் அன்னாரின் வாழ்வு அவர்களைப் பின்பற்றியவர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.அவர்கள் ஒரு தெயிவீகப் பிறவியாக அறிமுகப்படுத்தப்பட்டிருப்பின் அவர்களை முழுமையாகப் பின்பற்றுவது சாத்தியமானதாக இருந்திருக்காது. இதனாலேயே அல்லாஹ்; நபியாகிய தான் ஒரு மனிதனே என்பதைப் பிரகடனம் செய்யுமாறு அவர்களை வேண்டியுள்ளான்.''(நபியே!), சொல்லுங்கள்: நிச்சயமாகவே நான் உங்களைப் போன்ற மனிதனே. எனக்கு வஹி அறிவிக்கப்படுகின்றது.'' (18:110) ஒரு மனிதன் என்ற காரணத்தினால் நபியவர்களின் வாழ்வில் எல்லா மனிதர்களுக்கும் முழுமையான முன்மாதிரி இருப்பதையும் அல்-குர்ஆன் தெளிவாகக் குறிப்பிடுகின்றது:''அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஆதரவு வைத்து அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூர்பவராக இருப்பவர்களுக்கு அல்லாஹ்வின் தூதரில் நிச்சயமாக உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கின்றது'' (33:21) 

4. முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வு மனிதவாழ்வின் எல்லாத் துறைகளையும் தழுவிய ஒருவரின் வாழ்வு என்ற வகையில் அதில் அனைத்து தரப்பினருக்கும் தேவையான வழிகாட்டல்களும் முன்மாதிரிகளும் உண்டு. ஓர் இளைஞன், கொள்கைவாதி, வழிகாட்டி, சீர்திருத்தவாதி, நாட்டின் தலைவர், கணவன், தந்தை, நண்பன் முதலான எந்நிலையில் இருப்பவருக்கும் நபியவர்களின் வாழ்விலிருந்து வழிகாட்டலைப் பெற்றுக் கொள்ளலாம்.

5. நபிகளாரின் சரிதை அவர்களின் நுபுவ்வத்திற்கு தெளிவான சான்றாதாரமாகவும் விளங்குகின்றது. ஸீராவைப் படிக்கும் ஒருவர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைத்தூதராகவே இருத்தல் வேண்டும் என்பதற்கான ஆதாரங்களைக் கண்டு கொள்வார்.இவ்வாறு பல தனித்துவமான சிறப்புக் கூறுகளைக் கொண்ட நபியவர்களின் ஸீராவை நாம் கற்பது எம்மீது கடமையாகும்.

PLEASE FIND THIS LINK. Ar-Raheeq Al-Makhtum Book HISTROY OF PROPHET MOHAMMAD (SAL)

இந்திய அரசியல் முஸ்லீம்களுக்கு ஹராமா?




“இறை நம்பிக்கையாளர்களே ! நீங்கள் தீனுல் இஸ்லாமில் முழுமையாக நுழைந்து விடுங்கள் “ (அல்குர்ஆன் 2:208) . 

ஒரு முஸ்லீமின் வாழ்வில் ஏற்படும் அனைத்து பிரச்னைகளுக்கும் அடுக்களை முதல் ஆன்மீகம் வரை, பள்ளிவாயில் முதல் பாராளுமன்றம் வரை என அனைத்திற்கும் தீர்வை குர்ஆன் மற்றும் அதன் விளக்கவுரையாக திகழ்ந்த நபி(ஸல்) அவர்களின் வாழ்விலிருந்தே தேட வேண்டும் என குர்ஆன் வலியுறுத்துகிறது. அதனடிப்படையில் வாழ்வின் மற்ற துறைகளை போல் அரசியல் குறித்த இஸ்லாமிய கொள்கையையும் இந்திய அரசியல் குறித்த இஸ்லாத்தின் பார்வையையும் அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.இஸ்லாத்தின் அரசியல் கொள்கைஅல்லாஹ்வின் தூதரிடத்தில் அழகிய முன்மாதிரி இருக்கிறது (அல்குர்ஆன் 33:21) எனும் திருமறை வசனத்திற்கேற்ப அனைத்து விடயங்களிலும் நபி(ஸல்) அவர்களை பின்பற்ற வேண்டிய முஸ்லீம்கள் “என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறு தொழுங்கள்” (மாலிக் –ஸஹீஹுல் புகாரி 9.352) என்ற ஹதீதின் அடிப்படையில் நபி(ஸல்) அவர்களை தொழுகையில் பின்பற்றும் முஸ்லீம்கள் கூட இஸ்லாமிய அரசியல் கொள்கை குறித்து தெளிவற்றவர்களாக உள்ளனர். ஆட்சி செலுத்தும் அதிகாரம் அல்லாஹ்வை தவிர வேறு யாருக்கும் இல்லை. அவனை தவிர வேறு யாருக்கும் அடிபணியக் கூடாதென்று இறைவன் கட்டளையிட்டுள்ளான். (அல்குர்ஆன் 12:40, 4:65, 5:18, 6:57, 7:3) என குர்ஆன் பகர்கின்றது. வானின் அதிபதியே இப்பூமிக்கும் அதிபதி. எந்த இறைவன் பூமியை படைத்தானோ அவனுடைய சட்டங்கள் தான் பூமியை ஆள வேண்டும் என்பதையே பகுத்தறிவு உணர்த்தும்.இந்திய அரசியல் கொள்கை நமது நாடு ஜனநாயகத்தை அடிப்படையாக கொண்ட அரசியல் அமைப்பாகும்.
 
ஜனநாயகத்தின் ஆங்கில வார்த்தையான Democracy என்பது கிரேக்க சொல்லாகும். Demo என்றால் மக்கள் என்றும் Cracy என்றால் ஆட்சி முறை என்றும் பொருள். எனவே ஜனநாயகம் என்றால் மக்களின் ஆட்சி முறை என்று அர்த்தப்படும். ஆப்ரஹாம் லிங்கனின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் “மக்களுக்காக, மக்களால் நடத்தப்படும் மக்களின் ஆட்சி” (For the people, of the people, by the people). “ஜனங்களே அதன் நாயகர்கள்” என்பதே ஜனநாயகத்தின் அடிப்படை.

ஜனநாயகத்துக்கு முரணான ஜனநாயகம் பெரும்பான்மை மக்களின் விருப்பங்களை நிறைவேற்றி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறது என்பது ஜனநாயகத்துக்கு ஆதரவாக சொல்லப்படும் வாதமாகும். நடைமுறையில் நம் தேர்தல்களை பார்த்தால் மொத்த வாக்குகளில் 60% - 70% தான் பதிவாகும். பதிவான வாக்குகளில் சுமார் 30% - 35% வாங்கும் கட்சி ஆட்சியை பிடிக்கும். எனவே சுமார் 30% மக்களின் அபிமானத்தை பெறும் ஒரு கட்சி 100% மக்களை ஆளுவது எப்படி பெரும்பான்மை மக்களின் கருத்துக்கு மதிப்பளிப்பதாக ஆக முடியும்?.

 உதாரணமாக இந்தியாவில் சிறுபான்மையினராக இருக்கும் பிராமணர்கள் இந்தியாவை ஆள்வதும், யூதர்கள் அமெரிக்காவை ஆட்டி படைக்கும் சக்தியாக விளங்குவதையும் பார்க்கலாம்.(இந்திய) அரசியல் குறித்த அரசியல்வாதிகளின் பார்வை ஜனநாயகம் தோன்றிய கிரேக்க நாட்டிலே அதை உருவாக்கிய தத்துவஞானிகள் கூட அதை “பலவீனமான ஊழல் நிறைந்த ஆட்சி முறை” என்றே குறிப்பிட்டுள்ளனர். மிகச் சிறந்த நாடாளுமன்றவாதியும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமானஅண்ணா அவர்கள் ஜனநாயகம் குறித்து கருத்து தெரிவிக்கும் போது“ஜனநாயகம் எண்ணிக்கைக்கு மட்டுமே மதிப்பளிக்கும். திறமைக்கோ, தகுதிக்கோ மதிப்பளிக்காது. ஜனநாயகத்தின் அடிப்படையிலேயே அனைத்தையும் தேர்ந்தெடுப்பதாக இருந்தால் இந்தியாவின் தேசிய மிருகமாக புலிக்கு பதில் சொறி நாயையும் தேசிய பறவையாக மயிலுக்கு பதில் காகமும் தேர்ந்தெடுக்கப் பட வேண்டும்” என்றார். நமது பாரத முதல் பிரதமர் நேரு அவர்கள் கூட“அரசியல் என்பது கிரிமினல்களின் கடைசி புகலிடம்” என்று சொன்னார்கள். 60 ஆண்டுகள் கடந்தும் நிலை மாறவில்லை. வேண்டுமென்றால் கிரிமினல்களின் முதல் புகலிடமாக அரசியல் உள்ளது என கூறலாம். அதனால் தான் அறிஞர் காண்டேகர் சொன்னார் “ஜனநாயகத்தில் நீங்கள் விரும்பும் தலைவரை தேர்ந்தெடுக்கலாம். ஆனால் உங்களை விரும்பும் தலைவரை தேர்ந்தெடுக்க முடியாது”.

இஸ்லாமுக்கும் இந்திய அரசியலுக்குமுள்ள அடிப்படை வேறுபாடுகள்  ”மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” என்பது ஜனநாயகத்தின் அடிப்படை நாதமாகும். “இறை தீர்ப்பே மக்களின் விருப்பம்” என்பதே இஸ்லாமின் கொள்கை. ஜனநாயகம் தனது சட்டங்களை மனித மூளையிலிருந்து பெறும் அதே வேளையில் இஸ்லாமோ வஹி மற்றும் தூதரின் வழிகாட்டலிருந்து மட்டுமே பெறுகிறது. ஜனநாயகம் சட்டமியற்றும் அதிகாரத்தை மக்களின் மனோ இச்சையிடம் ஒப்படைத்திருக்கும் போது இஸ்லாமோ இறைசட்டத்தை அமுல்படுத்தும் பொறுப்பை மட்டுமே மனிதனிடம் ஒப்படைத்திருக்கிறது. ஜனநாயகம் மதத்தையும் அரசியலையும் பிரித்து மதத்தை மனிதனின் தனிப்பட்ட வாழ்வுடன் முடக்கிவிடுகிறது. ஆனால் இஸ்லாமோ மனிதனின் முழு வாழ்வுடன் பின்னிப் பிணைந்த ஒன்றாய் மாறி விடுகிறது. ஜனநாயகம் எண்ணிக்கையை மட்டும் பிரதானமாக கருதும் போது இஸ்லாமோ நீதி வழங்குதலை பிரதானமாக வலியுறுத்துகிறது. எனவே மேலோட்டமாக தெரியும் ஒரு சில ஒற்றுமைகளை மட்டும் கருத்தில் எடுத்துக் கொண்டு இஸ்லாமும் ஜனநாயகமும் ஒன்று என்பதோ ஜனநாயகத்தை ஹலாலாக்குவதோ கொக்கும் பாலும் வெண்மை நிறம் என்பதற்காக கொக்கும் பாலும் ஒன்று என்பதற்கு ஒப்பானதாகும்.

பெரும்பான்மை குறித்து இந்திய அரசியலும் இஸ்லாமும் இந்திய அரசியல் சட்டம் அல்லது ஜனநாயகம் பெரும்பான்மைக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது. 100 பேர் உள்ள சட்டமன்றத்தில் 51 பேர் ஒரு விடயத்தை ஆதரித்தால் அது சட்டமாகி விடும். அது நன்மை x தீமை, நியாயம் x அநியாயம், சரி x தவறு என்றெல்லாம் பிரித்து பார்ப்பதில்லை. மாறாக பெரும்பான்மையினர் ஆதரிப்பதால் இன்று நம் நாட்டில் மதுவும், விபசாரமும் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளதை பார்க்கின்றோம். இஸ்லாமோ மதுவை தீமைகளின் தாய் என்றும் விபசாரத்தின் அருகில் கூட நெருங்க வேண்டாம் என்று எச்சரிக்கின்றது. ஏனென்றால் இஸ்லாம் எண்ணிக்கையின் அடிப்படையில் சிறுபான்மை x பெரும்பான்மை என்று பிரிப்பதில்லை. அதனால் தான் திருமறை “பெரும்பான்மையினரின் விருப்பங்களை நீங்கள் பின்பற்றினால் வழி தவறி போவீர்கள் (அல் குர்ஆன் 6:116 ) என்று எச்சரிக்கின்றது. இந்த பெரும்பான்மை தான் 8 இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளை ஈராக்கில் கொன்றொழித்த புஷ்ஷையும், குஜராத் இனப்படுகொலை நடத்திய மோடியையும் அங்கீகரித்து மீண்டும் பதவியில் அமர்த்தியுள்ளது.தேர்தலில் வெற்றி பெறும் முறையும் இலட்சியமும்எத்தகைய முஸ்லீம் தலைவராக இருந்தாலும், அமைப்பாக இருந்தாலும் அரசியலில் சட்டமன்ற உறுப்பினராக வேண்டுமென்றால் கூட இன்றைய சூழலில் குறைந்த பட்சம் சில இலட்சங்களை வாரி இறைக்க வேண்டியதுள்ளது. யாரும் சொந்த பணத்தை செலவு செய்து வெறும் சம்பளத்துக்காக வேலை செய்ய மாட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் “யார் பதவியை கேட்கிறார்களோ அவர்களுக்கு கொடுக்காதீர்கள்” (அபு மூஸா (ரலி) – புகாரி 2261). 

அண்ணலாரின் வழிகாட்டுதலுக்கு நேர் முரணாக தனிநபர்கள் தங்களை வேட்பாளராக்க கட்சியை நெருக்குவதும் மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளையும் கொடுத்து வெற்றி பெறல் முஸ்லீம்களுக்கு ஹராமான ஒன்றே. நடைமுறை சாத்தியமில்லை என்றாலும் வாதத்திற்காக இஸ்லாமிய வரையறைக்கு உட்பட்டு தேர்தலில் வெற்றி பெற்றாலும் இவர் நிச்சயமாக அல்லாஹ்வுடைய வேதத்தின் படி பைஅத் (உறுதிமொழி) செய்வதற்கு பதில் அம்பேத்கர், ராஜேந்திர பிரசாத் போன்ற இறை நிராகரிப்பாளர்களால் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் சட்டத்தின் படியே பைஅத் செய்ய முடியும். இஸ்லாமிய அமைப்பில் “பைஅத்” செய்வதை விமர்சிக்கும் நாம் எப்படி இந்த பைஅத்தை சரி காண முடியும்?.நடைமுறை உதாரணங்கள்ஜனநாயகம் மூலம் இஸ்லாத்தை நிலை நாட்ட முடியும் என்று சொல்வோர் பெரும்பான்மை முஸ்லீம்கள் வாழும் பாகிஸ்தான், வங்காளதேசம், துருக்கி போன்ற நாடுகளில் இஸ்லாத்தை நிலை நாட்டுவதில் தோல்வி அடைந்துள்ளதை பார்க்கலாம். துருக்கி பிரதமர் எர்டகானின் மனைவியால் தலை முக்காடு அணிந்து பாராளுமன்றத்துக்கு வர முடியா நிலை தான் இன்றும் உள்ளது. அல்ஜீரியாவில் இஸ்லாமிய கட்சி ஜனநாயக தேர்தலில் வெற்றி பெற்றும் ஆட்சி அமைக்க முடியாமல் தடுக்கப்பட்டது நினைவிருக்கலாம். சமூகத்தை மாற்றாமல், அடிப்படைகளை மாற்றாமல், வெறும் முகங்களை மாற்றுவது கொண்டு எம்மாற்றத்தையும் கொண்டு வர முடியாது.இந்திய அரசியல் ஹராமா? – குர்ஆனிய பார்வையில்ஒரு முஸ்லீமை பொறுத்த வரையில் ஒரு விஷயத்தை ஹலால், ஹராம் என முடிவு செய்வது அதன் மூலம் கிடைக்கும் உலகாயத நன்மைகளோ அல்லது சமூகத்திற்கு கிடைக்கும் பயன்களைப் பொறுத்தோ மட்டுமல்ல. 

மாறாக திருமறை குர்ஆனும் திருத்தூதரின் வழிமுறையும் மட்டுமே ஒன்றை ஹலால், ஹராம் என முடிவு செய்ய கூடிய ஒன்றாக இருக்க முடியும். “யார் அல்லாஹ் இறக்கியருளிய சட்டத்திற்கேற்ப தீர்ப்பு வழங்கவில்லையோ அவர்கள் பாவிகள், நிராகரிப்பாளர்கள், அநிநாயக்காரர்கள் (அல் குர்ஆன் 5:44,45,47) என்று அல்லாஹ் கூறுகிறான். நபி (ஸல்) அவர்களே அல்லாஹ்விடத்தில் இவரின் கல்வி ஞானத்துக்காக துஆ செய்த திருக்குர்ஆனின் மிகச் சிறந்த விரிவுரையாளரான இப்னு அப்பாஸ் (ரலி) இவ்வசனத்துக்கு கருத்து தெரிவித்த போது தன் தப்ஸீரிலே “ யார் இறைவனுடைய ஆட்சியை அமுல்படுத்த தேவையில்லை என்று கருதுகிறார்களோ, யார் மனித ஆட்சி இறையாட்சியை விட மேலானது எனக் கருதுகிறார்களோ, யார் இறையாட்சி போல் மனித ஆட்சியும் நன்மை பயப்பது என கருதுகிறார்களோ அவர் நிராகரிப்பாளர்” என்று சொன்னார்கள். மேலும் இன்று நம்மில் பலர் இறையாட்சியை தான் விரும்புகிறோம், ஆனால் இறைவன் இறக்காத சட்டத்தின் படியும் ஆட்சி செய்யலாம் என கருதுகிறோம். இப்படிப்பட்டவர்களையும் காபிர் (இறைநிராகரிப்பாளர்) என்றே குறிப்பிடுகிறார்கள். ஏனென்றால் அவன் ஆட்சி அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்பதை மறுக்கிறான். அவன் இறையாட்சியை மனித ஆட்சியை விட மேலானது என கருதினாலும் சரியே என குறிப்பிடுகிறார்கள்.இந்திய அரசியல் ஹராமா ? – சுன்னாவின் ஒளியில்நபிமார்களை அனுப்பியதின் நோக்கத்தை பற்றி திருமறையில்இறைவன் பிற மார்க்கங்களை மிகைத்து இஸ்லாத்தை மேலோங்க செய்யவே அனுப்பியதாக (அல்குர்ஆன் 61:9) குறிப்பிடுகிறான்.இந்திய அரசியலின் மூலம் இஸ்லாத்தை மேலோங்க செய்யும் வாய்ப்பிருக்கின்றது என இன்னும் நப்பாசையில் இருப்பவர்கள் நபி (ஸல்) வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவு கூற வேண்டும். ஒரு சமயம் நபி (ஸல்) அவர்கள் “இவர்கள் அல்லாஹ்வையன்றி தங்கள் பாதிரிகளையும், சந்நியாசிகளையும், மர்யமுடைய மகன் மஸீஹையும் தங்கள் கடவுள்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர்” (அல்குர்ஆன் 9:31) எனும் வசனத்தை ஓதிக் கொண்டிருந்த போது அங்கு வந்த கிறிஸ்துவத்திலிருந்து இஸ்லாத்தை தழுவிய அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடத்தில் தாங்கள் மஸீஹை வணங்கியது உண்மை. 

ஆனால் எக்காலத்திலும் தங்கள் பாதிரிமார்களை வணங்கியதில்லை என்று கூறிய போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்ன பதில் நாம் ஆழமாக யோசிக்க வேண்டிய ஒன்றாகும்.இன்ஜீலில் ஒன்றை ஹலால் என்று சொல்லும் போது உங்கள் பாதிரிமார்கள் அதை ஹராமாக்கினால் ஹராமாக்கிக் கொண்டீர்களா? என்று கேட்டதற்கு ஆம் என்றார்கள். இன்ஜீலில் ஒன்றை ஹராம் என்று சொல்லும் போது உங்கள் பாதிரிமார்கள் அதை ஹலாலாக்கினால் ஹலாலாக்கி கொண்டீர்களா ? என்று கேட்டதற்கு ஆம் என்றார்கள். உடனே நபி (ஸல்) தெளிவாக சொன்னார்கள் “ அப்படியென்றால் நீங்கள் அவர்களை உங்களுடைய இலாஹ்வாக எடுத்து கொண்டீர்கள் என்றார்கள்(திர்மிதி). மேற்கண்ட சம்பவத்தில் நபி (ஸல்) அவர்கள் கிறித்தவர்களை இணைவைப்பாளர்கள் என்று சொன்னதற்கு காரணம் அவர்கள் தங்கள் பாதிரிமார்களுக்கு சுஜுது செய்தார்கள் என்பதற்காகவோ, பிராத்தனை புரிந்தார்கள் என்பதற்காகவோ அல்ல. மாறாக இறைசட்டத்துக்கு மாற்றமான மனித சட்டத்திற்கு அடிபணிந்தார்கள் என்பதற்காகவே. பாதிரிகளின் சட்டங்களுக்கு அடிபணிதல் ஷிர்க் என்றால் நம் நிலை என்ன?. உங்கள் மார்க்கத்தை பரிபூரணமாக்கி விட்டேன் (அல்குர்ஆன் 5:3) எனும் வசனத்திற்கேற்ப பரிபூரணத்துவம் பெற்ற குர்ஆனை வைத்துக் கொண்டு அதற்கு மாறான சட்டங்களை நிலைநாட்ட போராட முனைந்தால் அது தெளிவான ஷிர்க்கேயாகும்.இந்திய அரசியல் ஹராமா ? – ஸலபுகள், முன்னோர்களின் கூற்றுபடிஷைகுல் இஸ்லாம் இப்னு தைமியா அவர்கள் தனது அல்பதாவா (Vol 35-1373) வில் கூறும் போது “குர்ஆன் மற்றும் சுன்னாவில் தான் கற்றதை விட்டொழித்து அல்லாஹ், அவன் தூதரின் படி ஆட்சி செய்யாத ஆட்சியாளரை பின்பற்றும் அறிஞர் இறைநிராகரிப்பாளர் ஆவார். இவ்வுலகிலும் மறுமையிலும் தண்டனை பெறுவதற்கு தகுதியானவர்” என்று கூறுகிறார். இமாம் இப்னு ஜரீர், இப்னு ஹஜ்ம் அல் அந்தலூஸி போன்றோரும் இதே கருத்தின் அடிப்படையில் தீர்ப்பு கொடுத்துள்ளனர். தன் வரம்புகளை மீறி செயல்படுவர்கள் அவர்கள் வணங்கப்பட்டாலும், பின்பற்றப்பட்டாலும், அவர்களின் சட்டங்கள் பின்பற்றப்பட்டாலும் அவர்கள் தாகூத்தே என இமாம் இப்னு கய்யூம் அல் ஜவ்ஜியா குறிப்பிடுவது போல் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப், அஹ்மத் ஷாக்கிர் போன்ற எண்ணற்ற முன்னோர்கள், ஸலபுகள் ஜனநாயக அரசியல் ஷிர்க் என்பதில் கருத்தொற்றுமை கொண்டவர்களாக உள்ளனர்இந்திய அரசியல் ஹராமா ? – சமகால அறிஞர்களின் கருத்துசமகால அறிஞர்கள் பலரும் ஜனநாயகம் ஹராம் என கூறுகின்றனர்.

 உதாரணத்துக்கு ஷேக் முஹம்மது இப்னு ஸாலிஹ் அல் உதைமீன்அவர்கள் மனித சட்டத்தின் அடிப்படையில் நடைபெறும் ஆட்சியை பற்றி குறிப்பிடும் போது “அல்லாஹ்வின் அதிகாரம் நீக்கப்பட்டு அது இன்னொரு அதிகாரத்தை கொண்டு நிரப்பப்படுகிறது. மக்களிடத்தில் ஷரீஆவின் அதிகாரம் நீக்கப்பட்டு மனித கற்பனைகளில் உருவான அதிகாரத்தை கொண்டு நிரப்பப்படுகிறது. இது தெளிவான குப்ராகும். ஏனென்றால் அவன் இறையடிமையாய் இருக்கும் போது இறைவனுடன் தன்னை சமமாக்கி கொள்கின்றான். இதை அல்லாஹ் கண்டிக்கிறான். இந்த அடிப்படையில் தான் ஷேக் முஹம்மது நஸீருத்தின் அல்பானிஅவர்கள் கூட மதசார்பின்மையை அடிப்படையாக கொண்ட முஸ்தபா கமாலின் ஆட்சியை இஸ்லாத்துக்கு முரணானது என தீர்ப்பளித்தார்.இங்கிலாந்தை சேர்ந்த பிரபல அறிஞர் அப்துர் ரஹீம் கீரின் அவர்கள் 2004-ல் சென்னையில் நடைபெற்ற PEACE கருத்தரங்கில் “இஸ்லாமும் ஜனநாயகமும்” எனும் தலைப்பில் பேசும் போது “இஸ்லாம் சொல்லும் கடமையை ஒருவர் செய்யத் தவறினால் அவர் பாவியாக கருதப்படுவார். ஆனால் அவரது செயலை நியாயப்படுத்தினால் அவர் இஸ்லாத்தின் வரையறையை விட்டு வெளியேறியவராக கருதப்படுவார். உதாரணமாக ஒருவர் தொழவில்லையானால் அவர் பாவியாக கருதப்படுவார். ஆனால் தொழுவது தேவையில்லை என்று வாதிட்டால் அவர் நிராகரிப்பாளராக கருதப்படுவார். அது போல் ஒருவர் இஸ்லாத்துக்கு முரணாண மனித சட்டங்களுக்கு அடிபணிந்து வாழ நேரிட்டால் அவர் பாவியாக கருதப்படுவார். அவர் அந்த மனித சட்டங்களை ஆதரித்தால் அதை நியாயப்படுத்தினால் அதற்காக போராடினால் அவர் நிராகரிப்பாளராக கருதப்படுவார்” என்றார். மேலும் அப்துர் ரஹீம் க்ரீன் அவர்கள் “ஜனநாயகமும் இஸ்லாமும் ஒன்று என்று யாராவது சொன்னால் ஒருவர் திருமணம் செய்யும் போது மஹராக பணம் கொடுக்கிறார், விபசாரத்துக்கும் பணம் கொடுப்பதால் இரண்டும் ஒன்று என்று சொல்வதற்கு சமமாகும்” என்று விளக்கினார்.தீர்வுக்கான பாதை – இஸ்லாத்தின் அரசியல் கொள்கையை புரிந்து கொள்ளல்நம்மில் இஸ்லாமிய அடிப்படையில் வாழ தலைப்படும் மனிதர்கள் கூட இந்தியா போன்ற ஒரு நாட்டில் சிறுபான்மையினராக இருக்கும் போது நாம் நம் தனிப்பட்ட வாழ்வில் கடமைகளை நிறைவேற்றினால் போதும் என்று நினைக்கின்றனர். ஆனால் மக்கா வாழ்க்கையின் ஆரம்பக் கட்டத்தில் மிக மிகச் சிறுபான்மையினராக முஸ்லீம்கள் இருந்த போது பனூ அம்ரு பின் ஷாஷா எனும் ஒரு கோத்திர தலைவர் நபி (ஸல்) அவர்களிடத்தில் வந்து “உங்கள் மார்க்க கடமைகளை நிறைவேற்ற உங்களுக்கு உதவி செய்கிறேன். ஆனால் நீங்கள் ஆட்சியை கைப்பற்றும் போது உங்களுக்கு பிறகு ஆட்சியில் எங்களுக்கு பதவியில் பங்கு வேண்டும்” என்று கூறுகிறார். ஆட்சியை கைப்பற்றுவது இருக்கட்டும் அடி விழுந்தால் கூட தடுப்பதற்கு ஆளில்லா நம்முடைய நிலையை விட மிக பலவீனமான அச்சூழலிலும் அல்லாஹ்வின் தூதர் அவர்களின் கோரிக்கையை மறுத்ததோடு “ஆட்சி அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே” என்று சொன்னார்கள் (அத்தபரி, பிதாயா வன் நிஹாயா) என்றால் இஸ்லாம் ஆட்சி பீடம் ஏறும் போது தான் தீன் முழுமைப்படுத்தப்படும் என்பதை உணரலாம்.அல்லாஹ், தூதரின் வாக்குறுதியின் மீது முழுமையான நம்பிக்கை இஸ்லாமிய ஆட்சி மீண்டும் ஏற்படும் என்ற முழுமையான நம்பிக்கை ஒரு முஃமினுக்கு இருக்க வேண்டும். 

முஸ்லீம்கள் தற்போது இச்சமூகம் சந்தித்து வரும் சோதனைகளை, வேதனைகளை வைத்து நம்பிக்கையிழந்து விடக் கூடாது. நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு முன்னறிவிப்பு செய்தார்கள் “அல்லாஹ் விரும்பும் காலம் வரைக்கும் நுபுத்துவம் இருக்கும், அவன் நாடும் போது அதை நீக்கி விடுவான். பின் அல்லாஹ் விரும்பும் காலம் வரைக்கும் நுபுத்துவத்தின் வழிமுறையிலான கிலாபத் இருக்கும், அவன் நாடும் போது அதை நீக்கி விடுவான். அதற்கு பின் பரம்பரை ரீதியிலான ஆட்சிமுறை இருக்கும், அவன் நாடும் போது அதை நீக்கி விடுவான். அதற்கு பின் கொடுங்கோலர்கள் ஆட்சி அல்லாஹ் நாடும் வரை இருக்கும், அவன் நாடும் போது அதையும் நீக்கி விடுவான். பின் நுபுத்துவத்தின் வழிமுறையான கிலாபத் (இறையாட்சி) ஏற்படும் என்று கூறி விட்டு பின் அமைதியாக இருந்து விட்டார்கள்”(ஹீதைபா (ரலி) – முஸ்னத் அஹ்மத், திர்மிதி எண் 5378). நபி (ஸல்) அவர்களின் மேற்கண்ட முன்னறிவிப்பின் படி பார்க்கையில் நுபுத்துவம், கிலாபத்தே ராஷிதியா, பரம்பரை முடியாட்சி அனைத்தும் நீங்கி கொடுங்கோலர்களின் ஆட்சியில் இருக்கும் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இஸ்லாமிய ஆட்சி ஏற்படும் என்பது உண்மை. இப்போது நம்முன் உள்ள கேள்வி அல்லாஹ்வும் அவனது தூதரும் அளித்த வாக்குறுதிகளை உண்மையாக நம்பி நம் காலத்தில் வந்தாலும், வரா விட்டாலும் எதிர்கால தொலைநோக்கு அடிப்படையில் அவனுடைய மார்க்கம் மேலோங்க உழைக்க போகிறோமா? அல்லது நம்முடைய பலவீனத்திற்கு நியாயம் கற்பித்து இஸ்லாத்தை இஸ்லாம் அல்லாத வழிமுறைகளின் மூலம் நிலைநாட்டுவதாக எண்ணி இஸ்லாம் ஹராமாக்கிய ஒன்றை செய்ய போகிறோமோ?. அல்லாஹ்வும் தன் திருமறையில் “ மனிதர்களே ! உங்களில் எவரேனும் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு நற்செயல்களையும் செய்து வந்தால் அவர்களுக்கு முன்னர் சென்றவர்களைப் பூமிக்கு அதிபதிகளாக்கி போன்றே இவர்களையும் பூமிக்கு அதிபதியாக்குவதாக அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்” (அல்குர்ஆன் 24:55) என்று உற்சாகமளிக்கிறான்.தியாகமும் மறுமை நம்பிக்கையும்இந்தியாவில் வகுப்புக் கலவரங்களில் ஏராளமான முஸ்லீம்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 

ஆனால் இஸ்லாத்தை ஒரு கொள்கையாக எடுத்துச் சொன்னதற்காக, இஸ்லாத்தை நிலைநாட்டுவதற்காக நம் உயிரிழப்பும் அர்ப்பணிப்பும் மிக குறைவாகும். மக்காவின் சுடுமணலில் கொடுமைப்படுத்தப்பட்ட போது சுவனத்தின் வாடையை நுகர்ந்த பிலால் (ரலி), எலும்புக்குள்ளும் ஈமான் ஊடுறுவியுள்ளது என்று தூதரால் சொல்லப்பட்ட அம்மார்(ரலி), முழு சொத்தையும் அண்ணலாரோடு வாழ அர்ப்பணித்த சுஹைப் (ரலி), செல்வந்தராக பிறந்து இறக்கும் போது உடலை மூடவும் வழியின்றி மரணித்த முஸைப் (ரலி) ஆகியோரைப் போல் நாம் மறுமையை மனதிலே சுமந்தால் தீனை நிலைநாட்டும் பாதையில் தியாகங்களும் நமக்கு எளிதாக தெரியும், நம் பாதையும் தெளிவாகும்.முடிவுரை”(நபியே!) மார்க்கத்தின் நேரான ஒரு வழியில்தான் நாம் உங்களை ஆக்கியிருக்கின்றோம். ஆகவே அதனையே நீங்கள் பின்பற்றி நடப்பீராக! கல்வி ஞானமற்ற இந்த மக்களின் விருப்பங்களை பின்பற்றாதீர்கள்” (அல்குர்ஆன் 45:18) என்று இறைவன் குறிப்பிடுவது போல் நிச்சயமாக இஸ்லாம் ஒன்று மட்டுமே அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ள கூடிய மார்க்கமாக இருப்பது போலவே அதை அடையும் வழிமுறையும் ஒன்றாக தான் இருக்க முடியும். “Un Islamic are Anti Islamic” என்று சொல்வது போல் அல்லாஹ்வும் அவன் தூதரும் காட்டிய இஸ்லாத்தின் அடிப்படையிலான அரசியல் தவிர மற்ற அனைத்தும் ஜாஹிலிய்யாவே. அவற்றை விரும்பி பின்பற்றுவதும் அதன் அடிப்படையில் போராடுவதும் அதை நிலை நாட்ட போராடுவதும் நிச்சயமாக ஹராமான ஒன்றே என்பதை குர்ஆன், சுன்னா, ஸலபுகள், சமகால அறிஞர்கள் கூற்று படி பார்த்தோம்.”உலகத்தில் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த வேண்டுமென்றால் முதலில் உங்கள் உள்ளத்தில் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துங்கள்” என்று ஹஸன் அல் ஹீஸைபி கூறியதை போன்று நாம் தனி நபராக இருந்தாலும் இப்ராஹீம் (அலை) அவர்களை போன்று ஒரு சமுதாயமாக நாம் செயல்பட வேண்டும். முதலில் நம்மை, நம் குடும்பத்தை, மஹல்லாவை, சமூகத்தை இஸ்லாமிய அச்சில் முழுமையாக வார்த்தெடுக்க நம் நேரம், உடல், பொருளாதாரம், உயிரையும் அர்ப்பணிப்போம். அல்லாஹ் திருமறையில் “நீங்கள் கவலைப்படாதீர்கள், தளர்ந்து விடாதீர்கள். முஃமின்களாக இருந்தால் நீங்கள் தான் மேலோங்குவீர்கள்” (அல்குர்ஆன் 3:139) என்று குறிப்பிடுவது போல் நாம் விளங்கும் போது நிச்சயம் இந்த தீன் உலகை ஆளும் கொள்கையாக மாறும் இன்ஷா அல்லாஹ். எத்துனை அடிகள் எடுத்து வைத்தோம் என்பது முக்கியமல்ல. ஆனால் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் அல்லாஹ்வும் அவன் தூதரும் காட்டிய வழியில் இருக்கிறதா என்பது முக்கியம். பாதை தெரிகிறது என்பதற்காக மேற்கு நோக்கி பயணிப்பவன் ஒரு போதும் சூரிய உதயத்தை காண முடியாது.ஒவ்வொரு கற்களாய் கொண்டுவந்து மாளிகை செய்வோம்நம் வியர்வையாலும் இரத்தத்தாலும்மார்க்கத்துக்கு உரமிடுவோம்அல்லாஹ்வின் உதவியும் நம் முயற்சியும்ஒன்று சேரும் போது 
இன்ஷா அல்லாஹ் இறையாட்சி எனும் கனவும் நனவாகும்.

முஸ்லிம்களை கொன்று பலியை முஸ்லிம்கள் மீது போடும் சதி நாசவேலை அம்பலம்



மஸ்ஜிதுகளில் முஸ்லிம்களை கொன்று பலியை முஸ்லிம்கள் மீது போடும் சதி நாசவேலைகள் ஈராக் , ஆப்கான் , பாகிஸ்தான் , கஷ்மீர் போன்ற நாடுகளில் சாதாரணமாக நடைபெறுகின்றது அதே போன்ற சதி நாசவேலைகள் இந்தியாவிலும் தொடர்ந்து கண்டுபிடிக்கபட்டு வருகின்றது அந்த தொடரில் ஒரு சம்பவம் இங்கு தரப்படுகின்றது அவை பற்றி உங்களுக்கு OurUmmah.org செய்திகள் , கட்டுரைகள் என்பனவற்றை தந்துள்ளது, இது அந்த வரிசையில் மற்றும் ஒரு பதிவு.
இந்திய ராஜஸ்தான் குண்டுவெடிப்பு: R.S.S பயங்கரவாதிகள் சிக்கியுள்ளனர்:2007-ம்ஆண்டு அஜ்மீர் தர்காவுக்கு அருகே உள்ள பள்ளிவாசலில் ரமலான் நோன்பு துறக்கும் வேளையில் குண்டுவெடித்தது. அதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல்சிதறி பலியானார்கள். ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்தனர்.

அந்த ஆண்டின் ரமலானின் கடைசி நோன்பு நாள். விடிந்தால் நோன்புப் பெருநாள் என்ற மகிழ்ச்சியில் திளைத்திருந்த முஸ்லிம்களுக்கு மிகவும் அதிர்ச்சி யாகவும் வேதனையாகவும் மக்களை மேலும் துயரத்தில் ஆழ்த்தும் வண்ணமும் அன்றைய ராஜஸ்தான் மாநிலத்தை ஆண்ட பா.ஜ.க. அரசின் நடவடிக்கைகள் அமைந்தன விரிவாக பார்க்க
முஸ்லிம்களின் இடங்களில் முஸ்லிம்களே குண்டு வைத்தார்கள்(!) எனக் கூறி தொடர் கைதுகளை நிகழ்த்தினார்கள். அஜ்மீர் குண்டுவெடிப்புத் தொடர்பான வழக்கில் ராஜஸ்தான் முஸ்லிம் இளைஞர்கள் அடைந்த துன்பத்திற்கு அளவேயில்லாமல் போனது. எண்ணற்ற முஸ்லிம் இளைஞர் களின் கைது நடவடிக்கைகளால் ராஜஸ்தான் மாநில முஸ்லிம்கள் பீதியில் உறைந்தனர்.

இந்நிலையில் அஜ்மீர் குண்டுவெடிப்பும் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளால் நடத்தப் பட்டது என்ற உண்மை தற்போது வெளியாகி உள்ளது.
நடுநிலையாளர்கள், தொடக் கத்திலேயே கூறிவந்த குற்றச் சாட்டுகள் இதன்மூலம் நிரூபணமாகியுள்ளன.

அஜ்மீர் குண்டுவெடிப்பு தொடர் பாக தேவேந்திர தாஸ்குப்தா, சந்திரசேகர் என்ற இரண்டு ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இருவரை யும் ராஜஸ்தான் மாநில தீவிரவாதத் தடுப்புப்படை கைது செய்தது.

இந்த இரண்டு தீவிரவாதி கள் மட்டுமன்றி மாலேகான் குண்டுவெடிப்பு பயங்கரவாதி களான பெண் சாமியார் பிரக்யா சிங், மற்றும் ராணுவத்தில் இருந்து கொண்டு ஹிந்துத்துவா இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டு தேசத் துரோகம் செய்த கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித் என்பவனுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகம் இருப்பதால் அவர்களும் விசாரணை வளையத்தில் கொண்டு வரப்படுவார்கள் எனத் தெரிகிறது.
மொபைல் போன் சிம்கார்டை வைத்தே குண்டுவெடிப்பு ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகளை கையும் களவுமாக (கையும் வெடிகுண்டு களுமாக?) பிடித்ததாக தீவிரவாதத் தடுப்புப் படை அறிவித்துள்ளது.

இந்த செய்தியின் மூலம் நாட்டில் நிகழும் அனைத்து கெடுதல்களுக்கும் ஹிந்துத்துவா ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகள் மட்டுமே காரணமாக இருந்திருக் கிறார்கள் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபண மாகியுள்ளது.

நாட்டில் நிகழும் அனைத்து குண்டு வெடிப்பு களுக்கும் பல்வேறு பினாமி பெயர் களில் அமைப்புகள் நடத்திவரும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரே காரணம் என்ற தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்த போதிலும் கடும் நடவடிக்கை எடுக்க தாமதம் ஏன்?
2007&ல் நடந்த அஜ்மீர் குண்டு வெடிப்பை போல் பெங்களூரு, அஹ்மதாபாத், சூரத் போன்ற இடங்களில் குண்டு கண்டுபிடிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளிவந்தன.
குறிப்பாக குஜராத்தில் வானுயர்ந்த மரங்களின் உச்சியிலும், தொலைபேசி கம்பங்களின் உச்சியிலும் தீவிரவாதிகள் குண்டு வைத்ததாகவும் செய்திகள் பரவியதோடு குண்டுகள் கண்டுபிடிப் பதற்காக புறப்பட்ட குஜராத் காவல் துறையினர் சொல்லி வைத்த தைப் போல (அல்லது அவர்கள் முன்னரே வைத்ததைப் போல) மரங்களிலும் கம்பங்களிலும் ஏறி குண்டுகளை எடுத்தனர். இது அந்த ஆண்டின் மிகச்சிறந்த காமெடி காட்சியாக சர்வதேச அளவில் வர்ணிக்கப்பட்டது.ஆனால் இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக உத்தரப்பிரதேசத்தின் ஆசம்கார் மாவட்டத்திலுள்ள அப்பாவி இளைஞர்கள் இருவரை கைது செய்து சித்திரவதைப்படுத்திய குஜராத் ராஜஸ்தான் அரசுகள் தற்போது உண்மை குற்றவாளிகளின் முகவிலாசம் வெளிவந்துள்ளது. இந்நிலையில் இந்தியன் முஜாஹிதீன் என்ற கற்பனைக் கதைகளை தட்டிவிட்டவர்கள், அப்பாவிகளை சிறைப்பிடித்து சித்திரவதை செய்வோர் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். ஏனெனில் இவர்கள் குற்றவாளிகளுக்கு இணையான கொடியவர்கள் என்பதில் சந்தேகமில்லை.