சமுதாய மக்களின் கவனத்திற்கு


இறைவனின் திருப்பெயரால்...



தமிழகத்தில் தற்போது சாதி வாரி கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இந்தக் கணக்கெடுப்பில்
கேட்கப்படும் விவரங்கள்:

பகுதி அ : அமைவிட விவரங்கள்

பகுதி ஆ: வீட்டுப் பட்டியல் சுருக்கம்


பகுதி இ : மின்வாரிய எண் மற்றும் உட் பிளாக் எண்

பகுதி ஈ : தனிநபர் விவரங்கள் (நபரின் பெயர், குடும்பத் தலைவருக்கு உறவு, பா-னம்,

பிறந்த தேதி, தற்போதைய திருமண நிலை, தந்தையின் பெயர், தாயின் பெயர்,
தொழில், படித்து முடித்த கல்வி நிலை, மாற்றுத் திறனாளிகள், மதம், சாதி

பகுதி உ : குடியிருப்பு விவரங்கள் (பிரிவு 1: வீடு/குடியிருப்பு, பிரிவு 2: குடியிருப்பில் உள்ள
உறுப்பினர் விவரம், பிரிவு 3: வேலை மற்றும் வருமானம் சார்ந்தவை,
பிரிவு 4: சொத்துக்கள், பிரிவு 5: சொந்த நிலை மற்றும் இதர சொத்துக்கள்)
ஆகிய விவரங்கள் கேட்கப்பட உள்ளன. இதுபற்றிய தகவல்களை முன்னரே தயாரித்து வைத்துக்
கொண்டு, பதட்டமின்றி பதில் சொல்ல வேண்டும்.
சமூக, பொருளாதார கணக்கெடுப்பில் சாதி ரீதியான விவரம், தனிப்பட்ட முறையில் ஒருவருக்கு
எந்த சலுகையும் பெற்றுத் தராவிட்டாலும், கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு தொடர்பான, சமூக
அளவிலான முக்கிய முடிவுகளின் போது இந்தப் புள்ளி விவரம் முக்கிய ஆவணமாகப் பயன்படும்.

எனவே சாதி வாரி கணக்கெடுப்பில் சமுதாய மக்கள் கவனத்தோடு பதிவு செய்ய வேண்டும்.

குறிப்பாக "மதம்'' என்ற கேள்விக்கு "இஸ்லாம்'' என்று குறிப்பிடுவதே சரியானது. "முஸ்-ம்' என்று
பதிவு செய்யக்கூடாது. மேலும், "சாதி' என்ற கேள்விக்கு லெப்பை, செய்யது, ஷேக், அன்சார்,
தக்கனி முஸ்-ம், மாப்பிள்ளை, துதிலுலா (அரசிதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டவை)-
இவைகளில் ஏதாவது ஒன்றை மட்டும் குறிப்பிட வேண்டும். ராவுத்தர், மரைக்காயர் உள்ளிட்டோர்

"லெப்பை' என்ற பிரிவின் கீழ் வருவதால் "லெப்பை' என்றே குறிப்பிடவும். பட்டாணி, ஷரீப், பரிமளம்
என்ற பிரிவுகளை குறிப்பிட வேண்டாம்.

அதேபோல் ஒருவர், தான் எந்த சாதியும் சாராதவர் என்று குறிப்பிட்டாலோ அல்லது மேற்குறிப்பிட்ட
சாதிகள் அல்லாமல் வேறு சாதி குறிப்பிட்டாலோ அவர் இடஒதுக்கீடு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட
சலுகைகள் பெறுவதற்கு தகுதியற்றவராகக் கருதப்படுவார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும், குடும்ப வருமானம் என்பது மிக முக்கியமானதாகும். மாத வருமானத்தைக் கொண்டு
ஆண்டு வருமானம் கணிக்கப்படும். எனவே மாதத்திற்கு 2 ஆயிரம் ரூபாய் குறையாமலும், ஆண்டிற்கு
24 ஆயிரம் ரூபாய் குறையாமலும் குறிப்பிட வேண்டும். சிலர் கவுரவத்திற்காக ஆண்டு வருமானத்தை
கூடுதலாக குறிப்பிடுவதன் மூலம் அவர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வி உதவிச் சலுகைகளைப்
பறிக்க நேரிடும்.

தாங்கள் குறிப்பிட்ட விவரங்கள் சரியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை குடும்பத் தலைவர்
சரிபார்த்துக் கொள்வது அவசியமாகும்.
இதுபோக பகுதி ஊ-வில் கட்டாய வெளியீடுகள் விவரங்களை உறுதிப்படுத்துத-ல், குடியிருப்பில்
உள்ளோர் தாங்கள் அளித்த விவரத்தில் மதம் / சாதி / இனம் தவிர இதர விவரங்களை பொதுவாக்கி
வெளியிட விருப்பம் தெரிவிக்கின்றனரா என்ற கேள்விக்கு ஆம் என்று குறிப்பிட வேண்டும்.

வெளியீடு:
தமிழ்நாடு முஸ்-ம் முன்னேற்றக் கழகம்