இந்திய விடுதலைப் போரும் முஸ்லீம்களும்


இந்திய விடுதலைக்கு சிறை சென்றவர்களிலும், உயிர் நீத்தவர் களிலும் முஸ்லிம்கள் அதிகமாக இருந்தனர். அவர்களது மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட
விடுதலைப் போரில் மாண்டோர் எண்ணிக்கையின் முஸ்லிம்களின் விகிதாச்சாரம் அதிகமாகவே இருந்தது.
பிரபல எழுத்தாளர் குஷ்வந்த்சிங் (இல்லஸ்டிரேட் வீக்லி 29.12.1975)
ஐரோப்பியர்களின் இந்திய வருகைக்கு முன்பாக, இந்தியாவை ஆண்டவர்கள் முகலாய முஸ்லிம் மன்னர்கள். ஒளரங்கசீப் அவர்கள் தான் அகண்ட பாரதத்தை உருவாக்கி யவர். இன்றைய ஆப்கான், பாகிஸ் தான், பங்களாதேஷ் மற்றும் இன்றைய இந்தியாவில் காஷ்மீர் முதல் மதுரை வரையிலும் அவர் ஆட்சி நடந்தது. அவருக்குப் பின்னால் முகலாய பேரரசு பலவீனம் அடைந் தது. அதன் வீழ்ச்சிதான் ஆங்கிலேயர் கள், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர் கள், போர்ச்சுகீசியர்கள் ஆகியோர் இந்தியாவை ஆக்கிரமித்தனர். இதில் 95 சதவீத இந்தியாவை ஆக்கிரமித்த வர்கள் ஆங்கிலேயர்கள். இவர்கள் அனைவருக்கும் எதிராக வீரம் செறிந்த போர்களை முதலில் தொடங்கியவர்கள் முஸ்லிம்களே! அவர்களில் சிலரைப் பற்றிய சிறு குறிப்புகளை துணுக்குகளாக வாசகர் களுக்கு வழங்குகிறோம்.
-ஆசிரியர், மக்கள் உரிமை வார இதழ், சென்னை.