கருவில்
குழந்தை உருவாகுவதைத் தடுப்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்
காலத்தில் அஸ்ல் என்ற ஒரு முறை இருந்தது. இல்லற வாழ்வின் போது ஆண் உச்சகட்ட
நிலையை அடையும் போது தன் விந்தை மனைவியின் கற்ப அறைக்குள் செலுத்தாமல்
வெளியே விட்டுவிடுவான். இம்முறைக்குத் தான் அஸ்ல் என்று சொல்லப்படுகிறது.
இவ்வாறு செய்வதை நபிகள் நாயகம் (ஸல்) அனுமதித்துள்ளார்கள் என்பதற்குச்
சான்றுகள் உள்ளன.
நபிகள் நாயக்ம் (ஸல்) அவர்களது காலத்தில் குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் நாங்கள் "அஸ்ல்' (புணர்ச்சி இடை முறிப்பு) செய்து கொண்டிருந்தோம்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி
நூல் : புகாரி (5209
அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் நாங்கள் அஸ்ல் (புணர்ச்சி இடைமறிப்பு)
செய்து கொண்டிருந்தோம். இச்செய்தி நபிகள் நாயக்ம் (ஸல்) அவர்களை எட்டியது.
ஆனால் அவர்கள் எங்களைத் தடுக்கவில்லை.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி
நூல் : முஸ்லிம் (2610
கருவில்
குழந்தை உருவாகுவதைத் தடுக்க நபியவர்கள் காலத்தில் அஸ்ல் என்ற முறையை
நபித்தோழர்கள் கையாண்டுள்ளனர். இதே பிரச்சனைக்கு நவீன காலத்தில் ஆணுறை
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே இதை நாம் பயன்படுத்துவது தவறல்ல